brightness_1
سبحان الله (33)، الحمد لله (33)، الله أكبر (34) م
தஸ்ஹீஹ்-ஸுப்ஹானல்லாஹ்,முப்பத்தி மூன்று தடவைகளும், அத்தஹ்மீத்"அல்ஹம்து லில்லாஹ்",என முப்பத்தி மூன்று தடவைகளும்,தக்பீர்-"அல்லாஹு அக்பர்" என முப்பத்தி நான்கு தடவைகளும் நித்திரைக்கு முன்னர் கூறல்.இதனால் அன்றைய தினம் உடம்புக்கு வலுவும் ஆற்றலும் கிடைக்கிறது.
இதற்கானசான்று.அலீ (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸில் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(என் துணைவி)'பாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக் கிறார்கள் (அவர்களை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிறார் கள்) என்னும் செய்தி ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு எட்டியது.உடனே,அவர்கள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிக ளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்க சென்றார்கள்.ஆனால்,நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை.எனவே, ஆயிஷா (ரலியல் லாஹு அன்ஹா) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி (விட்டுத் திரும்பி)னார்கள்.பின்னர்,நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலில்லாஹு அன்ஹா) விஷயத்தைச் சொன்னார்கள்.(விபரமறிந்த) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்று விட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள்.அவர்களைக் கண்ட வுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம்.நபி (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,'(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள்' என்று கூறினார்கள்.(பிறகு) நான் அவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன்.(அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்தார்கள்.) பின்னர், 'நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் பெரியவன்' என்று முப்பத்து நான்கு முறையும், 'அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்விற்கே' என்று முப்பத்து மூன்று முறையும், 'சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்' என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள்.ஏனெனில்,அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும்' என்றார்கள்.(நூல்,புகாரி,எண்:3705,முஸ்லிம்,எண்:2727).
மற்றுமொரு அறிவிப்பில் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இதை நான் நபிகளாரிடமிருந்து கேட்டது முதல் ஒரு போதும் விட்டது கிடையாது என குறிப்பிட்டார்கள். அப்போது அவர்களிடம் நீங்கள் இதை ஸிப்ஃபீன் யுத்தம் இடம் பெற்ற இரவிலும் கூடவா என வினவப்பட்டது.அதற்கு அவர்கள் ஆம் ஸிப்ஃபீன் யுத்தம் இடம் பெற்ற இரவிலும் தான் -இதை நான் விட்டது இல்லை-என குறிப்பிட்டார்கள். (நூல்,புகாரி,எண்:5362,முஸ்லிம்,எண்:2727).
.......