1 தடவைகள்
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
நித்திரையின் போது ஆயத்துல் குர்ஸியை ஓதிக் கொள்வது ஸுன்னத்தாகும்.இதனால் காலை வரை ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு கிடைக்கிறது.
இதை பின்வரும் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சம்பவம் தெளிவுபடுத்துகிறது.அதில் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவிக்கின்றார்கள்.நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஜகாத்தை பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்.எனும் அவ்வதீஸ் தொடரில் விடிந்ததும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 'நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே!அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்;அதனால் அவனை விட்டு விட்டேன்!' என்றேன்.'அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்டார்கள்.'நீ படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசி வரை ஓதும்!அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்.ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்' எனத் தெரிவித்தேன்.நபித்தோழர்கள் நன்மையான (தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள்.அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 'அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக் கிறான்!மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா?என்று கேட்டார்கள்.'தெரியாது'என்றேன். 'அவன்தான் ஷைத்தான்!'என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.(நூல்,புகாரி,2311,அறிவிப்பாளர் தொடர் துண்டித்த நிலையி லிருக்க இமாம் நஸாஈ அவர்கள் தொடரான அறிவிப்பாளர் தொடருடன் அஸ்ஸுனன் அல் குப்ராவில் பதிவு செய்துள்ளார்கள்)
1 தடவைகள்
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285.286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகி விடும்.(நூல்,புகாரி,எண்:4008),இதை அபீ மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இவ்வத்தியாயம் அல் பகராவின் இறுதி வசனங்கள் இரண்டும் காலை மாலை திக்ருகளுடன் குறிப்பானது கிடையாது.மாறாக இது இரவில் சொல்லப்படும் திக்ராகும் ஒருவருக்கு இது இரவில் ஞாபகம் வாராது நித்திரை கொள்ளும் போது ஞாபகம் வந்தால் அவ்விரண்டையும் அப்போதும் ஓதிக் கொள்வார்.
இவ்வதீஸில் வந்துள்ள-கஃபதாஹ்-எனும் வார்த்தையின் விளக்கத்தில் கருத்து வேறுபடுகள் உள்ளன.
ஒரு கருத்தின் படி இது இரவு தொழுகைக்கு போதுமானது, எனவும் ஷைத்தானை விட்டும் போதுமானது எனவும் சொல்லப்படுகின்றது.
மேலும் இது ஆபத்துக்களை விட்டும் போதுமானது எனவும் சொல்லப்படுகின்றது. இமாம் அந்நவவி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுவது போன்று இவை அனைத்தையும் பொதிந்துள்ளது.பார்க்க:இமாம் அந்நவவியவர்களது ஷரஹ் முஸ்லிம் ஹதீஸ்,எண்:808)ஃபாத்திஹாவினதும்,அத்தியாயம் அல் பகராவின் இறுதி வசனங்களினதும்...... சிறப்பு எனும் பாடத்தில்.
3 தடவைகள்
இதற்கான சான்றாக பின்வரும் ஹதீஸ் அமைகிறது.
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் படுக்கைக்குச் சென்றால் குல்ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக்,குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112,113,114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதித் தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தம் முகத்தையும்,தம் இரண்டு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு இவர்கள் தலையிலிருந்து ஆரம்புத்து மூன்று தடவைகள் தடவிக் கொள்வார்கள்.(நூல்,புகாரி,எண்:5017).
முன்சென்ற ஹதீஸின் மூலமாக திடமாக:நபிளார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு இரவிலும் அவர்கள் இந்த ஸுன்னத்தான வழிமுறையை செய்தார்கள் என்பதை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் அனைத்து இரவுகளிலும் எனும் வார்த்தையினால் அறிந்து கொள்ள முடிகிறது.எனவே இந்த ஸுன்னத்தான வழி முறையை செயற்படுத்த விரும்புகிறவர் அவர் இரு கைகளையும் இணைத்து வைத்து கொள்வார்.பின்னர் அவர் இதில் இக்லாஸ்,அல் முஅவ்வித தைன் ஆகிய அத்தியாயங் களை ஓதி ஊதிக்கொண்டு.பின்னர் தனது உடம்பில் முடியுமான வரை தலை முகம் என ஆரம்பித்து பூராகவும் மூன்று முறை தடவிக் கொள்வார்.
1 தடவைகள்
உர்வதிப்னு நவ்ஃபல் ரலியால்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களின் தந்தையை தொட்டும் அறிவிக்கும் ஹதீஸில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவ்ஃபல் அவர்களுக்கு கூறினார்கள்"நீர் நித்திரை கொள்ளும் போது இறுதியாக அத்தியாயம் அல் காஃபிரூனை ஓதிக் கொண்டதன் பின்னர் நித்திரை கொள்வீராக அது உமக்கு இணைவைத்தலை விட்டும் ஈடேற்றமானதாக இருக்கும்." (நூல்,அஹ்மத்,எண்:21934,அபூ தாவுத்,எண்:5055,அத்திர்மிதி, எண்:3403,இமாம் அல் பானி அவர்கள் ஹஸன் என குறிப்பிட்டுள்ளார்கள்).
1 தடவைகள்
اللَّهُمَّ خَلَقْتَ نَفْسِي وَأَنْتَ تَوَفَّاهَا، لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا، إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا، وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ
"அல்லஹும்ம!கலக்த்த நஃப்சீ,வ அன்த்த தவஃப் பாஹா, லக்க மமாத்துஹா வ மஹ்யாஹா,இன் அஹ்யய்த்தஹா ஃபஹ்ஃபழ்ஹா,வ இன் அமத்தஹா ஃபக்ஃபிர் லஹா, அல்லஹும்ம!இன்னீ அஸ்அலுக்கல் ஆஃபியா" (நூல், முஸ்லிம்,எண்:2712).
1 தடவைகள்
اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْفُرْقَانِ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، اللَّهُمَّ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ ، وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، اقْضِعَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ
"அல்லாஹும்ம! ரப்பஸ் ஸமாவாத்தி வ ரப்பல் அர்ளி வ ரப்பல் அர்ஷில் அழீம்.ரப்பனா வ ரப்ப குல்லி ஷையின். ஃபாலிக்கல் ஹப்பி வந்நவா,வ முன்ஸிலத் தவ்ராத்தி வல்இன்ஜீலி வல்ஃபுர்கான்,அஊது பிக்க மின் ஷர்ரி குல்லி ஷையின்.அன்த்த ஆகிதும் பி நாஸியத்திஹ்,அல்லாஹும்ம! அன்த்தல் அவ்வலு; ஃப லைஸ கப்லக்க ஷைஉன், வ அன்த்தல் ஆகிரு; ஃப லைஸ பஅதக்க ஷைஉன்.வ அன்த்தழ் ழாஹிரு; ஃப லைஸ ஃபவ்கக்க ஷைஉன், வ அன்த்தல் பாத்தினு; ஃப லைஸ தூனக்க ஷைஉன், இக்ளி அன்னா அத்தைன வ அஃக்னினா மினல் ஃபக்ர்"(நூல், முஸ்லிம்,எண்:2713).
1 தடவைகள்
بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ
"பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ.வ பிக்க அர்ஃபஉஹு இன் அம்ஸக்த்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா வ இன் அர்ஸல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன்.(நூல்,புகாரி,எண்:6302,முஸ்லிம்,எண்:2714)
1 தடவைகள்
الْحَمْدُ للّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا، وَكَفَانَا وَآوَانَا، فَكَمْ مِمَّنْ لاَ كَافِيَ لَهُ وَلاَ مُؤْوِي
"அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா வ சகானா வ கஃபானா வ ஆவானா.ஃபகம் மிம்மன் லா காஃபிய லஹு, வலா முஃவிய" மற்றுமொரு அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பின் பிரகாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் படுக்கைக் குச்செல்லும் போது "அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா வ சகானா வ கஃபானா வ ஆவானா.ஃபகம் மிம்மன் லா காஃபிய லஹு, வலா முஃவிய"(நூல்,முஸ்லிம்,எண்:2715).
100 தடவைகள்
سبحان الله (33)، الحمد لله (33)، الله أكبر (34) م
தஸ்ஹீஹ்-ஸுப்ஹானல்லாஹ்,முப்பத்தி மூன்று தடவைகளும், அத்தஹ்மீத்"அல்ஹம்து லில்லாஹ்",என முப்பத்தி மூன்று தடவைகளும்,தக்பீர்-"அல்லாஹு அக்பர்" என முப்பத்தி நான்கு தடவைகளும் நித்திரைக்கு முன்னர் கூறல்.இதனால் அன்றைய தினம் உடம்புக்கு வலுவும் ஆற்றலும் கிடைக்கிறது.
இதற்கானசான்று.அலீ (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸில் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(என் துணைவி)'பாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக் கிறார்கள் (அவர்களை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிறார் கள்) என்னும் செய்தி ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு எட்டியது.உடனே,அவர்கள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிக ளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்க சென்றார்கள்.ஆனால்,நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை.எனவே, ஆயிஷா (ரலியல் லாஹு அன்ஹா) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி (விட்டுத் திரும்பி)னார்கள்.பின்னர்,நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலில்லாஹு அன்ஹா) விஷயத்தைச் சொன்னார்கள்.(விபரமறிந்த) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்று விட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள்.அவர்களைக் கண்ட வுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம்.நபி (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,'(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள்' என்று கூறினார்கள்.(பிறகு) நான் அவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன்.(அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்தார்கள்.) பின்னர், 'நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் பெரியவன்' என்று முப்பத்து நான்கு முறையும், 'அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்விற்கே' என்று முப்பத்து மூன்று முறையும், 'சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்' என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள்.ஏனெனில்,அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும்' என்றார்கள்.(நூல்,புகாரி,எண்:3705,முஸ்லிம்,எண்:2727).
மற்றுமொரு அறிவிப்பில் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இதை நான் நபிகளாரிடமிருந்து கேட்டது முதல் ஒரு போதும் விட்டது கிடையாது என குறிப்பிட்டார்கள். அப்போது அவர்களிடம் நீங்கள் இதை ஸிப்ஃபீன் யுத்தம் இடம் பெற்ற இரவிலும் கூடவா என வினவப்பட்டது.அதற்கு அவர்கள் ஆம் ஸிப்ஃபீன் யுத்தம் இடம் பெற்ற இரவிலும் தான் -இதை நான் விட்டது இல்லை-என குறிப்பிட்டார்கள். (நூல்,புகாரி,எண்:5362,முஸ்லிம்,எண்:2727).
1 தடவைகள்
اللَّهُمَّ إِنِّي أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ. لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ
"அல்லாஹும்ம! இன்னீ அஸ் லம்த்து வஜ்ஹீ இலைக்க, வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க,வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க; ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க.லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக் கல்லதீ அன்ஸல்த்த.வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த"(நூல்,புகாரி,எண்: 247,முஸ்லிம்,எண்:2710). இவ்வதீஸின் இறுதியில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை உமது வார்த்தைகளின் இறுதியானதாக அமைத்துக் கொள்வீராக,ஏனெனில் இவ்வாறு உமது இந்த இரவில் நீ மரணித்தால்,ஃபித்ராவில் நேரான மார்க்கத்தில் மரணிக்கின்றீர்.என குறிப்பிட்டார்கள்.மேலும் முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் "மேலும் நீர் இதன் படியே காலையை அடைந்தால் நல்லதாகவே காலையை அடைகின்றீர்.எனவும் குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸில் மற்றுமொரு ஸுன்னத்தான விடயமும் குறிப் பிடப்பட்டுள்ளது.அதாவது இந்த திக்ரை நித்திரை கொள்வ தற்கு முன்னராக இறுதியாக சொல்ல வேண்டிய வார்த்தை களாக அமைத்துக் கொள்ளல்,இவ்வாறு இது அமையுமாயின் அவருக்கான மிகப்பெரிய வெகுமதியும் இருக்கிறது.அதுவே அவரது மரணம் அன்றைய தினம் நிச்சயிக்கபட்டதாயின் அவர் இயற்கை மார்க்கத்தில் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இயற்கை தூய மார்க்கத்தில் மரணிக்கிறார்.மேலும் அவர் காலையை அடைவார் எனின் காலைப் பொழுதை நல்லதாகவும்,அபிவிருத்தி,பாக்கியம் ஆகியவற்றுடனும் அடைகிறார்.இவ்வாறான வார்த்தை சொற்றொடர்கள் அனைத் தையும் உள்ளடக்கியுள்ளதாக காணப்படுகிறது.-அல்லாஹ் மிக அறிந்தவன்.-
1 தடவைகள்
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய மிகப்பிரதான விடயங் களில் ஒன்று,மகத்தான ஒரு திக்ர்,அதுவே மகத்தான சிறப்புக் களுக்கும் காரணியாகும்.அதை மகத்துவமிக்க கண்ணியமான இறைவன் அல்லாஹ் அருளியிருக்கின்றான்.அதுதான் புகாரி கிரந்தத்தில் ஷத்தாத் பின் அவ்ஸ் ரலியால்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படக் கூடிய பாவமன்னிப்பு கோருவதின் தலையாய துஆ-இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்''அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ.லா இலாஹ இல்லா அன்த்த.கலக்த்தனீ.வ அன அப்துக்க.வ அன அலா அஹ்திக்க,வ வஅதிக்க மஸ்தத அத்து.அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து.அபூ உ லக்க பி நிஅமத் திக்க அலய்ய,வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ.ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப் புக் கோரலாகும்.இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறி விட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்க வாசிகளில் ஒருவராக இருப்பார்.இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.(நூல்,புகாரி,எண்:6306).
1 தடவைகள்
அபூத்தர்தா(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: "நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (மக்களை நோக்கி)"ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?" என்று கேட்டார்கள்."(ஒரே இரவில்) எவ்வாறு குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓத இயலும்?" என்று மக்கள் கேட்டனர்.நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "குல் ஹுவல்லாஹு அஹத் (என்று தொடங்கும் 112 ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பங்கிற்கு ஈடானதாகும்" என்று கூறினார்கள்.(நூல்,முஸ்லிம்,எண்: 811,புகாரி,எண்:5015).