brightness_1
ஸுன்னத்தான வழிமுறைகளை பின்பற்றுவதன் பயன்கள்
அன்புச்சகோதரா-நிச்சயம் ஸுன்னத்தான வழிமுறைகளை பின்பற்று வதனால் அதிகப்பயன்கள் உள்ளன.அவற்றுள் சில பின் வருமாறு:
1-அல்லாஹ்வின் அன்பு,நேசம் ஆகியவற்றில் உயர் அந்தஸ்தை அடைதல்.ஆகவே ஒரு அடியான் அல்லாஹ்வை உபரியான வணக் கங்களால் அவனை நெறுங்கும் போது அவனுக்கு அல்லாஹ்வின் நெறுக்கமும் அன்பும் நேசமும் கிட்டுகிறது.
இமாம் இப்னு கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடும் போது திடமாக அல்லாஹ் அவனின் நேசத் துகுரியவரை அகத்தாலும் புறத்தாலும் நேசிக்காத வரையிலும், உம்மை அவன் நேசிக்க மாட்டான்,மேலும் அவரை உண்மை படுத்தாதும்,அவருக்கு கட்டுப்படாதும்,அவருக்கு கட்டுப் படுவதை மேலாக கருதாத வரைக்கும், அவரின் தீர்ப்பை ஏனையவரின் தீர்ப்பை விட முற்படுத்தாமலும்.இருக்க வேண்டும்.அவ்வாறு இல்லை எனின் நீ நாடியாவாறு மீள் பரிசீலணை செய்து நீ வெளிச்சத்தை தேடிப்பார் உன்னிடத்தில் அதில் ஒன்றுமே கிடைக்கப்பெற மாட்டாய். (பார்க்க-மதாரி ஜுஸ்ஸாலிகீன்- 3/37).
2-அல்லாஹ் அடியானுடனிருத்தலும்,அல்லாஹ் அவருக்கு நல்ல வைகளுக்கு வழிகாட்டுவான்.அவரின் உடலுறுப்புக் களினால் இறைவன் விரும்புகின்றவைகள் மாத்திரம் தான் இடம்பெறும். ஏனெனில் அல்லாஹ் அவருடன் இருக்கின்றான்.
3-அல்லாஹ்வின் நேசத்தினால் அடியானின் பிராரத்தனைகள் அங்கி கரிக்கப்படல்.ஏனெனில் ஸுன்னத்தான உபரியான வழிமுறைகளினூடாக அல்லாஹ்வை நெறுங்கும் போது அல்லாஹ்வின் நேசம் கிட்டுகிறது.அவனின் நேசம் கிடைக்கும் போது அவரின் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.
இம்மூன்று பயன்களையும் அறிவிக்கும் சான்றாக பின்வரும் ஹதீஸ் அமைகிறது.
அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்:யார் எனது நேசரை பகைத்து கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன்.நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகிறான்.அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும்.எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக் கிறான்.அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன்.நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும்,அவன் பார்க்கின்ற பார்வையாகவும்,அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன்.அவன் என்னிடம் கேட்டால்,நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன்.முஃமினுடைய உயிரைக் கைப் பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை.(ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான்.நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன்.(நூல், புகாரி,எண் :6502)
4-கட்டாய பர்ளான செயல்களில் ஏற்படுகின்ற குறைகள், தவறுகள் இத்தகைய உபரியானவைகளினால் நிவர்த்தி செய்யப்படுகின்றன.ஏனெனில் உபரியானவைகளினால் பர்ளா னவைகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.
இதற்கான சான்று பின்வருமாறு.
அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக் கிறார்கள். நான் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்.அவர்கள் கூறினார்கள் "மறுமை நாளில் ஒரு அடியானின் வணக்கங்களில் முதலில் கேட்கப்படுவது தொழுகை பற்றியதாகும்.இது சீரானதாக இருந்தால் அவர் சீர் பெற்று வெற்றியும் பெற்று விட்டார்,மேலும் ஒருவரின் தொழுகை சீர்கெட்டிருந்தால் அவர் சீர் கெட்டு நஷ்டமடைந்து விட்டார்.ஒரு கட்டாயாமான பர்ளான ஒன்றில் ஏதும் குறைகள் இருப்பின் திடமாக மகத்துவமிக்க அல்லாஹ் கூறுவான்."இந்த எனது அடியானுக்கு ஏதும் உபரியான வணக் கங்கள் உண்டா...?என இவ்வாறு ஏதும் ஸுன்னத்தான உபரியான வணக்கங்கள் இருப்பின் அதை கொண்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.இவ்வாறே மற்றைய அனைத்து வணக் கங்களும் சீர் செய்யப்படும்.(அதாரம்,அஹ்மத்,எண்,9494,அபூ தாவுத்,எண்,864,அத்திர்மிதி.எண்,413,இதை இமாம் அல்பானி அவர்கள் ஒரு ஸஹீஹான ஹதீஸ் என ஸஹீஹுல் ஜாமிஃ இல் குறிப்பிட்டுள்ளார்கள். 1/405).