அபூ பர்ஸா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸில்."நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசிக் கொண் டிருப்பதையும் வெறுப்பவர்களாக இருந்தார் கள்".எனினும் இவ்வாறு பேசிக்கொண்டிருப்பது தேவையின் நிமித்தம் எனின் அது வெறுப் பானதாக மக்ரூஹ் ஆனதாக காணப்பட மாட்டாது.
இவ்வாறு வெறுக்கப்படுவதற்கான-மக்ரூஹ்-ஆன காரணி-அல்லாஹ் மிக அறிந்தவன்-இதனால் நித்திரை கொள்வது தாமதமாகிறது.இதன் விளைவாக வழக்கமாக இரவில் நின்று வணங்குபவராயின் அவரது இரவுத் தொழுகையும்,ஸுபஹ் தொழுகையும் தப்பி விடலாம்,அல்லது அவற்றை உரிய நேரத்தில் நிறைவேற்றி விட முடியாது போய் விடலாம்.
இதற்கான சான்றாக அமைகிறது:-
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்:ஓர் இரவில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இஷாத் தொழுகையை நன்கு இருள் படரும் வரைத் தாமதப்படுத்தினார்கள்.எந்த அளவிற்கென்றால் இரவின் கணிசமான பகுதி கடந்து விட்டது;பள்ளி வாசலில் இருந்தவர்கள் உறங்கியும் விட்டனர்.பிறகு நபி (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் புறப்பட்டு வந்து தொழுவித்து விட்டு,"இதுதான் என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டு விடும் என்ற அச்சம் எனக்கில்லையாயின் இஷாத் தொழுகைக்கான (மிகச்சிறந்த) நேரமாகும்."என கூறினார்கள். (நூல்,முஸ்லிம்,எண்:638).
இவ்வாறே பெண்களும் அவர்களின் தொழுகை ஜமாத்துடன் தொடர்ப்பு இல்லாத சமயத்தில் அவர்களுக்கும் கடினம் இல்லை எனும் போது இஷாத்தொழுகையை பிற்படுத்தி தொழுவது ஸுன்னத்தாகும். இவ்வாறே ஆணும் பிரயாணங்களில் ஈடுபட்டிருப்பது போன்று அவரது தொழுகை ஜமாத்துடன் தொடர்ப்பு அற்றதாக காணப்படும் எனின் அவரும் இஷாத் தொழுகையையை பிற்படுத்தி தொழுவது ஸுன்னத்து ஆகும்.