இரவுத்தொழுகைக்கான மிகச்சிறப்பான சிறந்த நேரம் என வினவப்பட்டால்.?
இதற்கான பதில் வித்ர் தொழுகையுடைய நேரம் இஷாத் தொழுகை முடிவிலிருந்து ஆரம்பித்து ஃபஜ்ர் உதயம் வரையிலாகும்.என்பது அறியப்பட்ட ஒன்று ஆகவே வித்ர் தொழுகையின் நேரம் இஷாவுக்கும் ஃபஜ்ருக்கும் இடைபட்ட நேரமாகும்.
இதற்கான சான்றாக பின்வருவது சான்றாகும்.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இஷா முடிவுற்றதிலிருந்து ஃபஜ்ர் வரையிலான நேரத்தில் பதினொரு ரக்அத்துக்களை தொழுவார்கள்.அதில் இவ்விரண்டு ரக்அத்துக்களுக்கும் இடையில் ஸலாம் கொடுப் பார்கள்.மேலும் வித்ராக ஒரு ரக்அத்தை தொழுவார்கள்.(நூல் முஸ்லிம்,எண்:2031,முஸ்லிம்,எண்:736)
-இரவுத்தொழுகைக்கு மிகச்சிறப்பான நேரம் இரவின் மூன்றாவது இறுதிப்பகுதியாகும்.
அதாவது ஒருவர் இரவை ஆறாக பிரித்து கொள்வார்.இரவின் இரண்டாவது பகுதியில் எழுந்து தொழுவார்.பின்னர் இறுதிப் பகுதியில் நித்திரை கொள்வார்.அதாவது ஆறு பகுதிகளில் நான்காவது,ஐந்தாவது பகுதிகளில் எழுந்து தொழுவார்.பின்னர் ஆறாவது பகுதியில் மீண்டும் நித்திரை கொள்வார்.
இதற்கான சான்றாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் அவர்கள் குறிப் பிடுகின்றார்கள். "நிச்சயமாக அல்லாஹுவுக்கு மிக விருப்பமான நோன்பு தாவூத் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் நோற்ற நோன்பாகும்.மேலும் தொழுகையில் அல்லாஹுவுக்கு மிக விருப்பமான தொழுகை தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழுகையாகும்.அவர்கள் இரவின் அரைப்பகுதி நித்திரை கொள்வார்கள்.மூன்றின் ஒரு பகுதியில் நின்று வணங்குவார்கள்.மேலும் ஆறில் ஒரு பகுதியில் மீண்டும் தூங்குவார்கள். அவர்கள் ஒருநாள் விட்டு மறுநாள் நோன்பு வைப்பவராக இருந்தார்கள்.(நூல்,புகாரி,எண்:3420.முஸ்லிம், எண்:1159).
இந்த ஸுன்னத்தான நபி வழிமுறையை ஒருவர் செயற் படுத்த நாடினால் அவர் எவ்வாறு அவரின் இரவை பிரித்துக் கொள்வார்?.
சூரியன் மறைந்தது முதல் ஃஜ்ர் வரையிலான நேரத்தை கணிப்பிட்டு கொள்வார்.பின்னர் அதை ஆறு பங்குகளாக பிரித்து முதல் மூன்றுபங்குகளும் இரவின் முதல் பகுதியாகும். இதன் பின்னர் அவர் எழுந்து தொழுவார்,அதாவது நான்காவது பகுதியில் எழுந்து தொழுவார் பின்னர் ஆறின் இறுதிப் பங்குகளான ஆறாவது பங்கில் மீண்டும் நித்திரை கொள்வார்.இதனால் தான் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் குறிப்பிடும் போது நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹரை அடையும் போது என்னிடத்தில் அவர்கள் தூங்கிய நிலையில் காணப் பட்டார்கள்.(நூல்:புகாரி,எண்:1133,முஸ்லிம்,எண்:742)
அப்தில்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க கூடிய முன்னைய ஹதீஸின் அடிப்படையிலுள்ள இவ்வழிமுறையின் படி ஒருவர் இரவுத் தொழுகையின் மிகச் சிறப்பான நேரத்தில் தொழுதமைக்கான கூலியை அடையப் பெறுவார்.
சுருக்கமாக கூறின் இரவுத்தொழுகைக்கான மிகச்சிறப்பான நேரத்தின் படித்தரங்கள் மூன்றாகும்.அவையாவன:
முதலாவது படித்தரம்-முன் கடந்து சென்றதை போன்று இரவின் முதல் பகுதியில் தூங்கி பின்னர் நடுப்பகுதியில் எழுந்து தொழுது விட்டு ஆறின் இறுதிப் பகுதியில் மீண்டும் நித்தரை கொள்வது.
இதற்கு சற்று முன்னர் குறிப்பிடப்பட்ட அம்ர் பின்அல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ் ஆதாரமாக இருக்கின்றது.
இரண்டாவது படித்தரம்- இரவின் மூன்றின் இறுதிப் பகுதியில் எழுந்து தொழுதலாகும்.
இதற்கான சான்றாக பின்வரும் ஹதீஸ் அமைகிறது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"உயர்வும்,வளமும் மிக்க நம் இறைவன் ஒவ்வொரு இரவிலும்,இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும் போது கீழ் வானிற்கு இறங்கி வந்து, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன்.என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன்.என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்" என்று கூறுகிறான்.இதை அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்,புகாரி,எண்:1145, முஸ்லிம்,எண்:758.). மேலும் பின்னர் வரக்கூடிய ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸும் இதற்கான சான்றாக அமைகிறது.
ஒருவர் அவரால் இரவின் இறுதிப் பகுதியில் எழுந்து தொழ முடியாது என உணரும் போது அவர் இரவின் ஆரம்ப பகுதியில் அல்லது இரவில் அவருக்கு மிக வசதியான நேரத்தில் இத்தொழுகையை மேற்கொள்வார், இது மூன்றாவது படித்தரமாகவும் காணப்படுகிறது.
மூன்றாவது படித்தரம்:இரவின் முதற்பகுதியில் அல்லது இரவில் அவருக்கு மிக வசதியான நேரத்தில் தொழுதல் ஆகும்.
இதை பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"இரவின் இறுயில் எழ முடியாது என அஞ்சுபவர் இரவின் ஆரம்பப் பகுதியிலேயே வித்ர் தொழுது விடட்டும்!இரவின் இறுதியில் எழ முடியும் என நம்புகின்றவர் இரவின் இறுதியிலேயே வித்ர் தொழட்டும்.ஏனெனில்,இரவின் இறுதி நேரத்தில் தொழும் போது (வானவர்கள்) பங்கேற்கின் றனர்.இதுவே சிறந்ததாகும்."இதை ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்,முஸ்லிம்: 755)
மேலும் நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்தோழர் அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு செய்த நல்லுபதேசமாகவும் இருக்கிறது.இதை இமாம் நஸாஈ அவர்கள் தமது அஸ்ஸுனன் அல் குப்ராவில் ஹதீஸ் இலக்கம் 2712 பதிவு செய்வதுடன்,இமாம் அபூ தாவுத் இலக்கம் 1433லும் இமாம் அல்பானியவர்கள் தமது அஸ்ஸஹீஹ் அபூதாவத் (5/177)ல் இதை ஸஹீஹ் என குறிப்பிட்டிருக்கின்றார்கள்.மேலும் இமாம் முஸ்லிம் அவர்கள் தமது நூலில் (737) அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு வாயிலாக பதிவு செய்துள்ளார்கள்.இவர்கள் அனைவரும் எனக்கு எனது நேசர் மூன்று அம்சங்களை கொண்டு நல்லுபதேசம் செய்தார்கள் என்றே ஆரம்பித்து "அதில் நித்திரைக்கு முன் வித்ர் தொழுகையை தொழுவது என குறிப்பிட்டுள்ளனர்."
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸுக்கு ஏற்ப இதுவே மிகப்பரிபூரணமான எண்ணிக்கையாகும். அவர்கள் அறிவிக்கும் அவ்வதீஸில் "நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாது காலத்திலும் இரவுத்தொழுகையை பதினொரு ரக்அத்துக்களுக்கும் அதிகமாக தொழ வில்லை."(நூல்,புகாரி,எண்:1147),(முஸ்லிம்,எண்:738).
மேலும் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஊடாக நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிமூன்று ரக்அத்துக்கள் தொழுதார்கள் என்றும் இமாம் முஸ்லிம் அவர்களது நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு எண்ணிக்கையிலான அறிவிப்புக்களிலும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வித்ர் தொழுகையில் பல்வேறு எண்ணிக்கையை கொண்டதாக தொழுதார்கள். எனினும் அவற்றுள் பதினொரு ரக்அத்துக்களை அதிகம் கடைபிடித் தார்கள்.எனவே தான் இவ்விரு ஹதீஸ்களின் அடிப்படையிலும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிலபோது பதினொரு ரக்அத்துக்களையும் சிலபோது பதிமூன்று ரக்அத்துக் களையும் தொழுது வந்துள்ளார்கள்.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரவு நித்திரையிலிருந்து எழுந்தால் மிகச்சுறுக்கமாக இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதை கொண்டு அவர்களது இரவுத் தொழுகையை ஆரம்பிப்பார்கள்.(நூல்,முஸ்லிம்,எண்:(767)
"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும்"அல்லாஹும்ம ரப்ப ஜப்ராயீல வ மீக்காயீல வ இஸ்ராஃபீல,ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி,ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாதத்தி,அன்த தஹ்குமு பய்ன இபாதிக ஃபீமா கானூ ஃபீஹி யக்தலிஃபூன்.இஹ்தினீ லிமக்துலிஃப ஃபீஹி மினல் ஹக்கி பி இத்னிக,இன்னக தஹ்தீ மன் தஷாஉ இலா ஸிராதிம் முஸ்தகீம்" என்று கூறுவார்கள்" (முஸ்லிம்,எண்:770).
இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நடு இரவில் (தஹஜ்ஜுத்) தொழுவதற்காக எழுந்ததும் (பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள்: "அல்லாஹும்ம,லக்கல் ஹம்து, அன்த்த நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ள்.வ லக்கல் ஹம்து, அன்த்த கய்யாமுஸ் ஸமாவாத்தி வல்அர்ள்.வ லக்கல் ஹம்து,அன்த்த ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வமன் ஃபீஹின்ன.அன்த்தல் ஹக்கு.வ வஅதுக்கல் ஹக்கு.வ கவ்லுக்கல் ஹக்கு.வ லிகாஉக ஹக்குன். வல்ஜன்னத்துக ஹக்குன்.வந்நாரு ஹக்குன்.வஸ்ஸாஅத்து ஹக்குன். அல்லாஹும்ம லக அஸ்லம்து,வ பிக ஆமன்து, வ அலைக தவக்கல்து, வ இலைக அனப்து,வ பிக காஸம்து,வ இலைக ஹாக்கம்து,ஃபஃக்ஃபிர்லீ மா கத்தம்து வமா அக்கர்து வ அஸ்ரர்து வ அஃலன்து.அன்த இலாஹீ. லா இலாஹ இல்லா அன்த.(நூல்,புகாரி,எண்:7499,முஸ்லிம்,எண்:768)
அ-அதாவது ஒரே முறையில் தொடராக ஓதாது நிறுத்தி நிறுத்தி ஓதுவது.
ஆ-ஒவ்வொரு வசனம் வசனமாக ஓதுவது,அதாவது இரண்டு மூன்று வசனங்களை ஒரே தடவையில் நிறுத்தாமல் தொடராக ஓதாமல் ஒவ்வொரு வசனத்தின் போதும் நிறுத்தி ஓதுவது.
இ-அல்லாஹ்வை துதிக்கும் வசனத்தின் போது அவனை துதித்தும், பிரார்த்தனைகள் கேட்கும் வசனத்தின் போது பிரார்த் திப்பதும்,பாதுகாப்பு தேடும் விதமாக வந்துள்ள வசனங்களின் போது பாதுகாப்பு தேடலும்.
முன்சென்றவைகளுக்கான சான்றாக இது அமைகிறது.
ஹுதைஃபா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக் கின்றார்கள்: நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் ஓர் இரவில்(தஹஜ்ஜுத்) தொழுதேன்.அதில் அவர்கள் "அல்பகரா”எனும் (இரண்டாவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள்.நான்"அவர்கள் நூறு வசனம் முடிந்ததும் ருகூஉச் செய்து விடுவார்கள்” என எண்ணினேன்.ஆனால், அவர்கள் (நூறு வசனம் முடிந்த பின்னும்) தொடர்ந்து ஓதினார்கள்.நான் "அ(ந்த அத்தியாயத்)தை (இரண்டாகப் பிரித்து ஓதி இரண்டாவது) ரக்அத்தில் முடித்து விடுவார்கள்" என எண்ணினேன்.ஆனால் (அதை முதல் ரக்அத்திலேயே) தொடர்ந்து ஓதினார்கள்.நான் "அவர்கள் அந்த அத்தியாயம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்” என எண்ணினேன். அவர்கள் (அந்த அத்தியாயம் முடிந்ததும்) "அந்நிசா" எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து ஓதினார்கள்;பிறகு ஆலு இம்ரான் எனும் (3ஆவது)அத்தியாயத்தை ஆரம்பித்து நிறுத்தி நிதானமாக ஓதினார்கள்.அவற்றில் இறைவனைத் துதிப்பது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும் போது (ஒதுவதை நிறுத்திவிட்டு),(சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூயவன் என) இறைவனைத் துதித்தார்கள்; (இறையருளை) வேண்டுவது பற்றிக்கூறும் வசனத்தைக் கடந்து செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு),(இறையருளை) வேண்டினார்கள்.(இறை தண்டனையிலிருந்து) பாது காப்புக் கோருவது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும் போது (ஓதுவதை நிறுத்தி விட்டு,இறைவனிடம்) பாதுகாப்புக் கோரினார்கள். பிறகு ருகூஉச் செய்தார்கள்.அவர்கள் ருகூவில் "சுப்ஹான ரப்பியல் அழீம்" (மகத்துவ மிக்க என் இறைவன் தூயவன்) என்று கூறலானார்கள். அவர்கள் நிலையில் நின்ற அளவுக்கு ருகூஉச் செய்தார்கள்.பின்னர் (ருகூவிலிருந்து நிமிரும்போது) "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்) என்று கூறி விட்டுக் கிட்டத்தட்ட ருகூஉச் செய்த அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நின்றிருந்தார்கள்.பிறகு சஜ்தாச் செய்தார்கள்.அதில் "சுப்ஹான ரப்பியல் அஃலா" (மிக்க மேலான என் இறைவன் தூயவன்) என்று கூறினார்கள். அவர்கள் நிலையில் நின்றிருந்த அளவுக்கு சஜ்தாச் செய்தார்கள்.(நூல்.முஸ்லிம்,எண்:772)
இமாம் அஹ்மத் அவர்கள் அவர்களது முஸ்னத் கிரந்தத்தில் அன்னை உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை தொட்டும் ஒரு ஹதீஸில் அன்னை உம்மு ஹபீபா ரலியல் லாஹு அன்ஹா அவர்களிடத்தில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் -இரவு நேரத்தொழுகையின் போதான- ஓதல் எவ்வாறு காணப்பட்டது என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் {பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்}{அல் ஹம்து லில்லஹி ரப்பில் ஆலமீன்}.{அர்ரஹ்மானிர்ரஹீம்} {மாலிகியவ் மித்தீன்} என ஒவ்வொரு வசனமாக நிறுத்தி நிறுத்தி ஓதுவார்கள்.என குறிப்பிட்டார்கள்,(நூல்,அஹ்மத், எண்:26583,அத்தாரகுத்னீ,எண்118,இதிலுள்ள அறிவிப்பாளர் வரிசை சீரானது,ஸஹீஹ் ஆனது,இமாம் நவவி அவர்கள் இதை தமது மஜ்மூஃ ல் ஸஹீஹ் என குறிப்பிட்டுள்ளார்கள். (3/333).
அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் கூறியதாவது:ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எப்படித் தொழ வேண்டும்?" எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும். சுப்ஹு (நேரம் வந்து விட்டது) பற்றி நீங்கள் அஞ்சினால் ஒரு ரக்அத் (வித்ர்) தொழுது கொள்ளுங்கள்!"என கூறினார்கள்.(நூல்,புகாரி,எண்:990, முஸ்லிம்,எண்:749).
இதில் வந்துள்ள (மஸ்னா,மஸ்னா) -இரண்டு இரண்டு-என்பதன் கருத்தாவது நான்கு ரக்அத்துக்களாக மொத்தமாக தொழாது.ஒவ்வொரு இரண்டு ரக்அத்துக்களுக்கு மத்தியிலும் ஸலாம கொடுத்தலாகும்.
முதல் ரக்அத்தில் அத்தியாயம்{ஸப்பி இஸ்ம ரப்பிகல் அஃலாவும்}, இரண்டாவதில்{குல் யா அய்யுஹல் காஃபிரூனும்},மூன்ராவதில் {குல் ஹுவல்லாஹு அஹதும்} ஓதுவது.
இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாமாக அமைகிறது.
ஒரு ஹதீஸில் உபை பின் கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்,நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ர் தொழுகையை ஸப்பி இஸ்ம ரப்பிகல் அஃலாவும்,குல் யா அய்யுஹல் காஃபிரூனும்,குல் ஹுவல் லாஹு அஹதும் ஓதி தொழுவார்கள்.(நூல் அபூதாவுத்,எண் 1423,அந்நஸாஈ,எண்:1733,இப்னு மாஜாஃ, எண்:1171).இமாம் நவவி அவர்கள் தமது -அல் குலாஸா- எனும் நூலில் (1/556) ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் அல்பானி அவர்களும் ஸஹீஹ் அந்நஸாஈயில் (1/273) இவ்வாறே குறிப்பிட்டுள் ளார்கள்.
இதனால் நாடப்படுவது வித்ரின் இறுதி ரக்அத்தில் அதாவது ஸூரதுல் இக்லாஸ் ஓதப்படும் மூன்றாவது ரக்அத்தில் பிராரத்தனை செய்வதாகும்.
இந்த குனூத் வித்ர் தொழுகையில் சிலசமயங்களில் ஓதுவதும் இன்னும் சில வேளைகளில் விட்டு விடுவதும் ஸுன்னத்தான வழிமுறையாகும். இது சில நபித்தோழர்களினால் செயற்படுத்தப் பட்டமைக்கான சான்றுகளும் உள்ளன.இதுவே ஷைக் பின் தைமியா ரஹ்மதுல்லாஹ் அவர்களது தெரிவும் ஆகும். எனினும் இதை செயற்படுத்துவதை விட விட்டு விடுவது அதிகமாக இருத்தல் மிக ஏற்றமானது.
வினா:குனூதின் போது அவரது இரு கரங்களையும் உயர்த்த வேண்டுமா....?
மிகச்சரியானது அவர் குனூத்தின் போது கையை உயர்த்துவார். இதைனையே அதிகமான மார்க்க அறிஞர்களினதும் கருத்தாகும்.மேலும் இது தொடர்ப்பாக இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக பைஹகீ கிரந்தத்தில் ஸஹீஹான பதிவுகள் வந்துள்ளன.
இமாம் பைஹகீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடும் போது நபித் தோழர்களில் பலரும் அவர்களின் குனூத்தின் போது கைகளை உயர்த்தியுள்ளனர்.(பாரக்க:அஸ்ஸுனன் அல் குப்ரா.(2/211).
வினா:ஒருவர் அவரின் வித்ரில் ஓதப்படும் குனூத்தை எதை கொண்டு ஆரம்பம் செய்வார்.....?
மிகச்சரியான கருத்தாவது (அல்லாஹ் மிக அறிந்தவன்)அவர் அல்லாஹ்வை புகழ்ந்து அவனை துதித்து ஆரம்பித்து, பின்னர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து சொல்லியதன் பின்னர் அவர் -ஏனைய-பிரார்த்தனைகளை செய்வார். ஏனெனில் இதுவே பிராரத்தனை அங்கிகரிப்பதற்கு மிக ஏற்றமான வழிமுறை யாகும்
இதற்கு சான்றாக பின்வரும் ஹதீஸ் அமைகிறது.
ஃபுதாலத் பின் உபைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸில்.நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபிகளார் மீது ஸலவாத்து சொல்லாது பிரார்த்தனையில் ஈடுபட்ட மனிதரை பார்த்து இவர் அவசரப் பட்டு கேட்டு விட்டார்.என அவருக்கும் ஏனையவர்களுக்கும் இவ்வாறு கூறினார்."ஒருவர் தொழுகையில் துஆ கேட்டால் அவர் முதலில் அல்லாஹ்வை புகழ்து துதிக்கட்டும் பின்னர் நபியின மீது ஸலவாத்து சொல்லிய பின் தனக்கு நாடியவ தேவையானவற்றை கேட்டுக்கொள்ளட்டும் "(நூல்:திர்மிதி,எண்:3477 (இவ்வதீஸ் ஒரு ஸஹீஹ்,ஹஸன் தரத்தை உடையது என குறிப் பிட்டுள்ளார்கள்).
இமாம் இப்னுல் கையிம் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் குறிப்பிடும் போது ஒருவர் பிரார்த்தனை -துஆ- செய்யும் போது விரும் பத்தக்க முஸ்தஹப்பான வழிமுறை,முதலில் அவரின் தேவைக ளுக்கு முன்னராக அல்லாஹ்வை புகழ்து அவனை துதித்து பின்னர் அவரின் தேவைகளை கேட்பதாகும்.இதுவே ஃபுதாலத் பின் உபைத் ரலியல்லாஹு அன்ஹுவினுடைய ஹதீஸில் இடம் பெற்றுள்ள -ஸுன்னத்தான-வழிமுறையாகும்.(பார்க்க:அல்வாபிலுஸ்ஸபீல்.பக்கம்- 110).
வினா:குனூத்தின் பிராரத்தனைகள் முடிந்தவுடன் அவரின் இரு கைகளால் முகத்தை தடவிக்கொள்ள வேண்டுமா...?
இதற்கான மிகச்சரியான தீர்ப்பு அவர் தமது கரங்களினால் முகத்தை தடவிக்கொள்ள மாட்டார்,ஏனெனில் இவ்வாறு தடவிக் கொள்வதற்கான சரியான ஆதாரங்கள் சான்றுகள் ஏதும் கிடையாது.
இமாம் மாலிக் ரஹ்மஹுல்லாஹ் அவர்களிடத்தில் பிரார்த்த னையின் பின் தமது இரு கரங்களால் முகத்தை தடவிக் கொள்ளும் ஒருவர் பற்றி வினவப்பட்ட போது அதை அவர்கள் நிராகரித்து,பின்னர் நான் அதை பற்றி எதையும் அறியவில்லை என கூறினார்கள்.(பார்க்க.இமாம் அல்மர்வஸி அவர்களின் கிதாபுல் வித்ர்,பக்கம்-236).
ஷைகுல் இஸ்லாம் -ரஹ்மஹுல்லாஹ்- அவர்கள் குறிப்பிடும் போது - துஆவுக்கு பின்னர்-கையிகளினால் முகத்தை தடவிக் கொள்ளல் தொடர்ப்பாக ஓரிரு ஹதீஸ்கள் தான் வந்துள்ளன.இருப்பினும் அவை ஆதாரமாகவும் கொள்ளவும் முடியாதுள்ளது.(பார்க்க.அல் ஃபதாவா,(22/519).
இரவின் மூன்றின் இறுதிப்பகுதியில் மிக முக்கியமான ஏற்றமான பிராதான ஸுன்னத்தான வழி முறைகளில் ஒன்று துஆப் பிரார்த்தனை செய்வது.ஒருவர் அவரின் குனூத்தின் போது பிராரத்தனை செய்தாலும் அது போதுமானது.அவ்வாறு இல்லாத போது இந்நேரத்தில் பிரார்த்திக்க வேண்டும். ஏனெனில் இந்நேரம் துஆக்கள் பிராரத்தனைகள் அங்கி கரிக்கப்பட மிகவும் ஏற்புடையாதாகும்.மேலும் அல்லாஹ்வின் கண்ணி யத்துக்கும் மகத்துவத்துக்கும் பொறுத்தமான அமைப்பில் பூமியின் கீழ் வானத்துக்கு இறங்குகின்றான்.இதை பற்றிய ஹதீஸ் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு வாயிலாக புகாரி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது அதில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்."கண்ணியத்துக்கும் மக்த்துவத்துக்கும் உரிய ஏக இறைவன் ஒவ்வொரு இரவின் இறுதிப்பகுதியிலும் கீழ் வானத்துக்கு இறங்கி கூறிகின்றான் என்னிடத்தில் எவர் என்னை அழைக்கின்றார் நான் விடையளிக்கின்றேன்,மோலும் என்னிடத்தில் ஏதும் கேட்கின்றவர் இருக்கின்றாரா நான் அவருக்கு கேட்டதை கொடுக்கின்றேன்.இன்னும் எவர் பாவமன்னிப்பு வேண்டுகின்றார்,நான் அவருக்கு பாவமன்னிப்பு அளிக்கின்றேன்"என கூறுவான்.(நூல்,புகாரி,எண்:1145,முஸ்லிம்,எண்: 758).
இதை தெளிவுபடுத்தும் சான்றாக பின் வரும் ஹதீஸ் அமைகிறது.
ஒரு ஹதீஸில் உபை பின் கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்,நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ர் தொழுகையை {ஸப்பி இஸ்ம ரப்பிகல் அஃலாவும்},{குல் யா அய்யுஹல் காஃபிரூனும்},{குல் ஹுவல்லாஹு அஹதும்} ஓதி தொழுவார்கள்.அதில் ஸலாம் கொடுத்தவுடன்"ஸுப்ஹானல் மிலிகில் குத்தூஸ்") என மூன்று தடவைகள் கூறுவார்கள்.(நூல்,அந்நஸாஈ, எண்:1733).முன்னர் கூறியது போன்று இவ்வதீஸை இமாம்களான நவவி,அல்பானி ஆகியோர் ஸஹீஹ் என குறிப்பிட்டுள்ளனர்.மேலும் அப்துர் ரஹ்மான் பின் அபஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக வரும் மற்றொரு ஹதீஸில் அவர்கள் மூன்றாவது தடவை "ஸுப்ஹானல் மலிகில் குத்தூஸ் எனும் போது அவரது சப்தத்தை உயர்த்துவார்கள் எனவும் வந்துள்ளது.(நூல் அஹ்மத்,எண்:15354, அந்நஸாஈ,எண்:1734,மேலும் இமாம் அல்பானி அவர்கள் தமது தஹ்கீகு மிஷ்காதுல் மஸாபீஹ் இல் (1/273) ஸஹீஹ் என குறிப்பிட்டுள்ளார்கள்).
கணவன் மணைவியையும்,ஏனைய அங்கத்தவர்களையும் இரவுத் தொழுகைக்காக எழுப்பி விடுவதும்,மணைவியும் இவ்வாறு எழுப்பி விடுவதும் ஸுன்னத்தாகும்.மேலும் இது ஒருவருக்கொருவர் நல்ல வற்றின் பால் உதவி ஒத்தாசை புரிவதாக காணப்படுகிறது.
இதை பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களுக்கு முன்னால் குறுக்கே படுத்துக் கொண்டிருப்பேன்.அவர்கள் (தஹஜ்ஜுத் தொழுகையை முடித்துவிட்டு) வித்ர் மட்டும் எஞ்சியிருக் கும் போது என்னை எழுப்பி விடுவார்கள்;நான் (எழுந்து) வித்ர்தொழுவேன்.(நூல் புகாரி,எண்:512,முஸ்லிம்,எண்:512.
உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார்கள்.நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஓர் இரவு விழித்ததும்,'ஸுப்ஹானல்லாஹ்!இந்த இரவில்தான் எத்தனை சோதனைகள் இறக்கப்பட்டுள்ளன? எத்தனை பொக்கிஷங்கள் திறக்கப் பட்டுள்ளன.அறைகளில் உள்ள பெண்களை எழுப்பி விடுவோர் யார்? இவ்வுலகில் ஆடை அணிந்திருந்த எத்தனையோ பேர் மறுமையில் நிர்வாணிகளாக இருப்பார்கள்'என்று குறிப்பிட்டார்கள்.(நூல்,புகாரி, எண்: 6218).
-அவருக்கு கலைப்பு ஏற்பாட்டால் உட்கார்ந்து தொழுவதும் ஸுன்னத்தாகும்.
அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள்.நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (பள்ளிக்கு) வந்த போது இரண்டு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று கட்டப் பட்டிருக்கிறது.'இந்தக் கயிறு ஏன்?' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கேட்டார்கள்.அதற்கு மக்கள்,'இது ஸைனபு (ரலியல்லாஹு அன்ஹாவு)க்கு உரியதாகும்;அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றில் சாய்ந்து கொள்வார்' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 'கூடாது.இதை அவிழ்த்து விடுங்கள்.உங்களில் ஒருவர் உற்சா கத்துடன் இருக்கும் போது தொழ வேண்டும். சோர்வடைந் தால் உட்கர்ந்து விட வேண்டும்' என்று கூறினார்கள். (நூல்,புகாரி, எண்:1150,முஸ்லிம்,எண்:784).
-தூக்கம் மிகைத்து விடுமாயின் சற்று உறங்கிய பின்னர் உற்சாகமாக எழுந்து தொழுதல்-
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் எவரேனும் தொழும் போது கண்ண யர்ந்துவிட்டால்,அவர் தம்மை விட்டுத் தூக்கம் அகலும்வரைத் தூங்கிவிடட்டும்! ஏனெனில், உங்களில் ஒருவர் உறங்கியவாறே தொழுவாரானால் அவர் (உணர்வில்லாமல்) பாவமன்னிப்புக் கோரப்போக,அவர் தம்மைத்தாமே ஏசி (சபித்து)விடக் கூடும்.- இதை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(புகாரி, எண்,212,முஸ்லிம்,எண்:786).
இவ்வாறே இரவில் ஒருவர் குர்ஆனை ஓதும் போது தூக்கம் மிகைத்து விட்டால் தூங்கி தன்னை பலப்படுத்திக்கொள்வதும் ஸுன்னாத்தான வழிமுறையாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவர் இரவில் தொழும் போது (உறக்கம் மேலிட்டு) நாவில் குர்ஆன் வராமல் தடை பட்டு,தாம் என்ன சொல்கிறோம் என்பதை அவர் அறியாத நிலைக்குச்சென்று விடுவாரானால் அவர் படுத்து உறங்கட்டும்! .இதை அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல், முஸ்லிம், 787)
ஒருவரின் வழமை மூன்று ரக்அத்துக்கள் தொழுவதாயின் அவரால் நோய்,தூக்கம் ஆகியவற்றால் அது தொழ முடியாது தப்பிவிட்டால் அதை பகற்பொழுதில் நான்கு ரக்அத்துக்க ளாகவும்,ஒருவரின் வழமை ஐந்து ரக்அத்துக்கள் தொழுவது எனின் அவரால் நோய்,தூக்கம் ஆகியவற்றால் தொழமுடியாது தப்பிவிட்டால் அதை பகற்பொழுதில் ஆறு ரக்அத்துக்களா கவும் தொழுதுகொள்வார்.இவ்வாறு தான் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தும் வந்தார்கள். அவரின வழமை இரவில் பதினொரு ரக்அத்துக்கள் தொழுவது எனவே அவர்களுக்கு அவ்வாறு தொழுவது தப்பி விடும் போது அதை பகற் பொழுதில் நிறைவேற்றும் போது பன்னிரெண்டாக தொழுவார்கள். இதை தான் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் போது "நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நோய்,தூக்கம் ஆகியவற்றால் இரவுத்தொழுகை தப்பிவிட்டால் பகற்பொழுதில் பன்னிரெண்டு ரக்அத்துக்களாக அதை நிறை வேற்றுவார்கள். (நூல்,முஸலிம்,எண்:746)