brightness_1
வித்ர் தொழுகையை இரவில் அதன் மிகச்சிறப்பான நேரத்தில் தொழுவதுதான் ஸுன்னத்தான வழிமுறையாகும்.
இரவுத்தொழுகைக்கான மிகச்சிறப்பான சிறந்த நேரம் என வினவப்பட்டால்.?
இதற்கான பதில் வித்ர் தொழுகையுடைய நேரம் இஷாத் தொழுகை முடிவிலிருந்து ஆரம்பித்து ஃபஜ்ர் உதயம் வரையிலாகும்.என்பது அறியப்பட்ட ஒன்று ஆகவே வித்ர் தொழுகையின் நேரம் இஷாவுக்கும் ஃபஜ்ருக்கும் இடைபட்ட நேரமாகும்.
இதற்கான சான்றாக பின்வருவது சான்றாகும்.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இஷா முடிவுற்றதிலிருந்து ஃபஜ்ர் வரையிலான நேரத்தில் பதினொரு ரக்அத்துக்களை தொழுவார்கள்.அதில் இவ்விரண்டு ரக்அத்துக்களுக்கும் இடையில் ஸலாம் கொடுப் பார்கள்.மேலும் வித்ராக ஒரு ரக்அத்தை தொழுவார்கள்.(நூல் முஸ்லிம்,எண்:2031,முஸ்லிம்,எண்:736)
-இரவுத்தொழுகைக்கு மிகச்சிறப்பான நேரம் இரவின் மூன்றாவது இறுதிப்பகுதியாகும்.
அதாவது ஒருவர் இரவை ஆறாக பிரித்து கொள்வார்.இரவின் இரண்டாவது பகுதியில் எழுந்து தொழுவார்.பின்னர் இறுதிப் பகுதியில் நித்திரை கொள்வார்.அதாவது ஆறு பகுதிகளில் நான்காவது,ஐந்தாவது பகுதிகளில் எழுந்து தொழுவார்.பின்னர் ஆறாவது பகுதியில் மீண்டும் நித்திரை கொள்வார்.
இதற்கான சான்றாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் அவர்கள் குறிப் பிடுகின்றார்கள். "நிச்சயமாக அல்லாஹுவுக்கு மிக விருப்பமான நோன்பு தாவூத் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் நோற்ற நோன்பாகும்.மேலும் தொழுகையில் அல்லாஹுவுக்கு மிக விருப்பமான தொழுகை தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழுகையாகும்.அவர்கள் இரவின் அரைப்பகுதி நித்திரை கொள்வார்கள்.மூன்றின் ஒரு பகுதியில் நின்று வணங்குவார்கள்.மேலும் ஆறில் ஒரு பகுதியில் மீண்டும் தூங்குவார்கள். அவர்கள் ஒருநாள் விட்டு மறுநாள் நோன்பு வைப்பவராக இருந்தார்கள்.(நூல்,புகாரி,எண்:3420.முஸ்லிம், எண்:1159).
இந்த ஸுன்னத்தான நபி வழிமுறையை ஒருவர் செயற் படுத்த நாடினால் அவர் எவ்வாறு அவரின் இரவை பிரித்துக் கொள்வார்?.
சூரியன் மறைந்தது முதல் ஃஜ்ர் வரையிலான நேரத்தை கணிப்பிட்டு கொள்வார்.பின்னர் அதை ஆறு பங்குகளாக பிரித்து முதல் மூன்றுபங்குகளும் இரவின் முதல் பகுதியாகும். இதன் பின்னர் அவர் எழுந்து தொழுவார்,அதாவது நான்காவது பகுதியில் எழுந்து தொழுவார் பின்னர் ஆறின் இறுதிப் பங்குகளான ஆறாவது பங்கில் மீண்டும் நித்திரை கொள்வார்.இதனால் தான் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் குறிப்பிடும் போது நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹரை அடையும் போது என்னிடத்தில் அவர்கள் தூங்கிய நிலையில் காணப் பட்டார்கள்.(நூல்:புகாரி,எண்:1133,முஸ்லிம்,எண்:742)
அப்தில்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க கூடிய முன்னைய ஹதீஸின் அடிப்படையிலுள்ள இவ்வழிமுறையின் படி ஒருவர் இரவுத் தொழுகையின் மிகச் சிறப்பான நேரத்தில் தொழுதமைக்கான கூலியை அடையப் பெறுவார்.
சுருக்கமாக கூறின் இரவுத்தொழுகைக்கான மிகச்சிறப்பான நேரத்தின் படித்தரங்கள் மூன்றாகும்.அவையாவன:
முதலாவது படித்தரம்-முன் கடந்து சென்றதை போன்று இரவின் முதல் பகுதியில் தூங்கி பின்னர் நடுப்பகுதியில் எழுந்து தொழுது விட்டு ஆறின் இறுதிப் பகுதியில் மீண்டும் நித்தரை கொள்வது.
இதற்கு சற்று முன்னர் குறிப்பிடப்பட்ட அம்ர் பின்அல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ் ஆதாரமாக இருக்கின்றது.
இரண்டாவது படித்தரம்- இரவின் மூன்றின் இறுதிப் பகுதியில் எழுந்து தொழுதலாகும்.
இதற்கான சான்றாக பின்வரும் ஹதீஸ் அமைகிறது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"உயர்வும்,வளமும் மிக்க நம் இறைவன் ஒவ்வொரு இரவிலும்,இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும் போது கீழ் வானிற்கு இறங்கி வந்து, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன்.என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன்.என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்" என்று கூறுகிறான்.இதை அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்,புகாரி,எண்:1145, முஸ்லிம்,எண்:758.). மேலும் பின்னர் வரக்கூடிய ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸும் இதற்கான சான்றாக அமைகிறது.
ஒருவர் அவரால் இரவின் இறுதிப் பகுதியில் எழுந்து தொழ முடியாது என உணரும் போது அவர் இரவின் ஆரம்ப பகுதியில் அல்லது இரவில் அவருக்கு மிக வசதியான நேரத்தில் இத்தொழுகையை மேற்கொள்வார், இது மூன்றாவது படித்தரமாகவும் காணப்படுகிறது.
மூன்றாவது படித்தரம்:இரவின் முதற்பகுதியில் அல்லது இரவில் அவருக்கு மிக வசதியான நேரத்தில் தொழுதல் ஆகும்.
இதை பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"இரவின் இறுயில் எழ முடியாது என அஞ்சுபவர் இரவின் ஆரம்பப் பகுதியிலேயே வித்ர் தொழுது விடட்டும்!இரவின் இறுதியில் எழ முடியும் என நம்புகின்றவர் இரவின் இறுதியிலேயே வித்ர் தொழட்டும்.ஏனெனில்,இரவின் இறுதி நேரத்தில் தொழும் போது (வானவர்கள்) பங்கேற்கின் றனர்.இதுவே சிறந்ததாகும்."இதை ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்,முஸ்லிம்: 755)
மேலும் நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்தோழர் அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு செய்த நல்லுபதேசமாகவும் இருக்கிறது.இதை இமாம் நஸாஈ அவர்கள் தமது அஸ்ஸுனன் அல் குப்ராவில் ஹதீஸ் இலக்கம் 2712 பதிவு செய்வதுடன்,இமாம் அபூ தாவுத் இலக்கம் 1433லும் இமாம் அல்பானியவர்கள் தமது அஸ்ஸஹீஹ் அபூதாவத் (5/177)ல் இதை ஸஹீஹ் என குறிப்பிட்டிருக்கின்றார்கள்.மேலும் இமாம் முஸ்லிம் அவர்கள் தமது நூலில் (737) அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு வாயிலாக பதிவு செய்துள்ளார்கள்.இவர்கள் அனைவரும் எனக்கு எனது நேசர் மூன்று அம்சங்களை கொண்டு நல்லுபதேசம் செய்தார்கள் என்றே ஆரம்பித்து "அதில் நித்திரைக்கு முன் வித்ர் தொழுகையை தொழுவது என குறிப்பிட்டுள்ளனர்."