brightness_1
பிரார்த்தனையை திரும்பத்திரும்ப கேட்டலும் அதில் இரைஞ்சலும்.
இதை இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் வாயிலான முன்னர் குறிப்பிடப்பட்ட ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்று வாயாக.இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்கு வாயாக." என இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந் தார்கள். எந்த அளவுக்கென்றால்,(கைகளை உயர்த்தியதால்) அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல் துண்டு நழுவி கீழே விழுந்து விட்டது.அப்போது அவர்களிடம் அபூ பக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வந்து,அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள் மீது போட்டு விட்டு, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும்.அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறை வேற்றுவான்" என்று கூறினார்கள்.(நூல்,முஸ்லிம்,எண்: 1763)
அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் வாயிலாக புகாரி,முஸ்லிமில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தவ்ஸ் கூட்டத்தாருக்காக பிரார்த்தனை செய்யும் போது அவர்கள் 'இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத் திற்குக்) கொண்டு வருவாயாக!' என பிரார்த்தித்தார்கள்".(நூல்,புகாரிஎண்:2937,முஸ்லிம்,எண்:2524)
அவ்வாறே அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வாயிலாக முஸ்லிமில் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் மனிதர் பற்றி வரக்கூடிய ஹதீஸில் "அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி "என் இறைவா,என் இறைவா" என பிரார்த்திக்கிறார்.(நூல்,முஸ்லிம்,எண்:1015).இதுவும் பிரார்த்தனையின் போதான திரும்பத்திரும்ப கேட்டல் ஆகும்.
புகாரி,முஸ்லிமில் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக வரக்கூடிய ஹதீஸின் பிரகாரம் மூன்று முறை பிரார்த்தனை செய்வது ஸுன்னத்து ஆகும்.அதில் அவர்கள் குறிப்பிடுகின் றார்கள்.-அல்லாஹ்விடத்தில் துஆக் கேட்டால்,மூன்று தடவைகள் கேட்பார்கள். பின்னர் அவர்கள் "குறைஷியர் களுக்கு எதிராக அல்லாஹ்விடத்தில் மூன்று முறை பிராத்தனை செய்தார்கள்."(நூல்,புகாரி,எண்:240, முஸ்லிம், எண்:1794)