brightness_1
மக்ரிப் தொழுகைக்கு முன்னர் இரு ரக்அத்துக்கள் தொழல்.
அப்துல்லாஹ் பின் அல் முகப்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.நபிகளார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள்"மக்ரிப் தொழுகைக்கு முன்னர் தொழுது கொள்ளுங்கள்"என கூறிவிட்டு பின்னர் அதை மக்கள் ஒரு ஸுன்னத்தாக எடுத்துக் கொள் வார்கள் என்பதை வெறுத்தவர்களாக "நாடியவர் இதை தொழுது கொள்ளட்டும்" என கூறினார்கள்.(நூல்,புகாரி,எண்:1183)
மேலும் அனைத்து அதானுக்கும் இகாமத்துக்கும் இடைப் பட்ட நேரத்தில் இரு ரக்அத்துக்கள் தொழுவது ஸுன்னத் தாகும்.
இவ்வாறு இரு ரக்அத்துக்கள் ஃபஜ்ர்,லுஹர் தொழுகைகளின் ராதிபான வைகள் போன்று இருப்பினும் சரி இதன் போது இவ்விரு ரக்அத்துக் களும் இதற்கு நிகராகின்றன.அல்லது ஒருவர் பள்ளியில் அமர்ந்து இருக்கின்ற நிலையில் முஅத்தின் அஸர் தொழுகைக்கு,அல்லது இஷாத் தொழுகைக்கு அதான் சொல்லுகிறார் எனின் இதன் போது அவர் எழுந்து இரு ரக்அத்துக்கள் தொழுவது ஸுன்னத் தாகும்.
இதற்கான சான்றாக அமைகிறது:-
அப்துல்லாஹ் இப்னு முகப்பல் அல் முஸனி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.'ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக் குமிடையில் ஒரு தொழுகை உண்டு' என்று நபி (ஸல்லல் லாஹு அவைஹி வஸல்லம்) அவர்கள் இரண்டு முறை கூறி விட்டு மூன்றாம் முறை 'விரும்பியவர்கள் தொழலாம்' என்றார் (நூல், புகாரி,எண்:624,முஸ்லிம்,எண்:838).
மக்ரிப் தொழுகைக்கு முன்னரும் அல்லது ஒவ்வொரு அதானுக்கும் இகாமத்துக்கும் இடையிலும் இரு ரக்அத்துக்கள் தொழுவது ஸுனன் ரவாத்திபுகள் போன்று மிக மிக்கியமான ஸுன்னத்துக்கள் கிடையாது என்பதில் சந்தேகம் ஏதும் கிடையாது.இவைகள் சில போது நிறை வேற்றப்படும்.மற்றும் சில போது விடப்படும்.எனவே தான நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கள் இதை ஸுன்னத்து என எண்ணிக்கொள்ளாது இருக்க மூன்றாவது தடவை குறிப்பிடும் போது யார்"விரும்புகின்றாரோ" எனக் குறிப்பிட்டார்கள்.