languageIcon
search
search
brightness_1 இதில் மிக உன்னதாமனது அல்லாஹ்வின் வேதமாகிய அல் குர்ஆனை ஓதுவது.

இதில் மிக உன்னதாமனது அல்லாஹ்வின் வேதமாகிய அல் குர்ஆனை ஓதுவது.எனவே தான் முன்சென்ற நல்லடியார்க ளின் தூக்கம் களைந்தன.இதை சதா ஒதிய வண்ணம் வணக்கத்தால் இரவில் விழித்திருந்தனர்.அல்லாஹ் குறிப்பிடும் போது."அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்த னைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண் டிருப்பார்கள்."(அத்தாரியாத்:17,18).இவர்களது இரவுகள் நபிகளார் வாயிலாக வந்துள்ள திக்ருகள் அல் குர்ஆன் ஓதல்கள் ஆகியவைகளால் பிண்ணிப்பிணைந்து காணப் பட்டன.இவ்வாறு இரவுகளை தானும் தன் குடும்பதினராலும் உயிரூட்டும் பாக்கியம் கிட்டியவர்களின் பாக்கியம் தான் என்ன..எமது பல இராப் பொழுதுகளும் ஸஹர் நேரங்களும் கவனக் குறைவு,அலட்சியம் ஆகிவற்றால் வீணாக கழிகின் றனவே இதன் கைசேதம் தான் அளப்பரியது....எம்மில் அல்லாஹ் அருள்புரிந்த ஒரு சிலரே இதனை விட்டும் ஈடேற்றம் பெற்றுள்ளனர். 

அப்துர்ரஹ்மான் அவர்கள் கூறியதை அதாபின் அஸ்ஸாஇப் அவர்கள் வாயிலாக ஹம்மாதிப்னு ஸைத் அவர்கள் கூறுகி றார்கள்.நாம் அல் குர்ஆனிலிருந்து பத்து வசனங்களை கற்று அவற்றை புரிந்து கொள்ளாத வரை மற்றைய பத்து வசனங் களை தாணடி விட மாட்டோம் எனகூறிய ஒரு கூட்டத்தி டமிருந்து நாம் அல் குர்ஆனை பெற்றுக் கொண்டோம். எனினும் எமக்கு பின்னராக சிலர் அல் குர்ஆனின் வாரிசுகளாகளாவர்.அவர்கள் அதை தண்ணீர் அருந்துவது போல் அறுந்துவர்-ஓதுவர்-அது அவர்களின் கழுத்துக்களை கூட சென்றடைய மாட்டாது.(பார்க்க- ஸியர் அஃலா முந்நு பலாஃ:4/269)

brightness_1 அல்லாஹ்வை ஞாபகப் படுத்தல் உள்ளங்களுக்கான உயிரோட்டமாகும்

குறிப்பாக அதிக வேலைப்பழுக்கள்,அதிக ஈடுபாடுகள் உள்ள இக்காலத்தில் அதிகமானோரின் முறைப்பாடு உள்ளத்தில் கரையும், சிதைவும்,மறதியும் தான் என்பதுவே.எனினும் உள்ளத் தின் வாழ்வும் அதன் உயிர் நாடியும் அல்லாஹ்வை ஞாபகப் படுத்தல் ஆகும்.அபீ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாரை தொட்டும் அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது அதில்.இறைத் தூதர் (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்'தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகிறவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும்,தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக் கிறது.முஸ்லிமில் வரக் கூடிய பிரிதொரு அறிவிப்பில் "தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகிற வீட்டினது நிலை உயிருள்ளவரின் நிலைக்கும்,மேலும் தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாத வீட்டின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.(நூல்,முஸ்லிம்,எண்:6407,முஸ்லிம்,எண்:779)  என அபூ மூஸா(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.  

brightness_1 அல்லாஹ் அதிக இடங்களில் அவனை ஞாபகப் படுத்தும் படி தூண்டியுள்ளான்.அவ்வாறான வற்றுள் சில.

1-அல்லாஹ் அவனது அடியார்களுக்கு அவனை அதிகம் நிணைவு கூறும் படி தூண்டியுள்ளான்.அல்லாஹ் குறிப்பிடும் போது."ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதி கமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள். இன்னும்,காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்."(அல் அஹ்ஸாப்:41,42)

2-அல்லாஹ்வை ஞாபகப்படுத்தும் ஆண்கள்,பெண்களுக்கு பாவமன்னிப்பையும் உயர்வான கூலியையும் கொண்டு வாக்க ளித்துள்ளான்.அல்லாஹ் குறிப்பிடும் போது. "அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும்,பெண்களும் - ஆகிய இவர்களுக்கும் அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்".(அல் அஹ்ஸாப்: 35).

3-அல்லாஹ் நயவஞ்சகர்களின் பிண்புகளை விட்டும் எமக்கு எச்சரிக்கை செய்துள்ளான்.அவர்கள் அல்லாஹ்வை ஞாபகப் படுத்துவார்கள் அவ்வாறு அல்லாஹ்வை ஞாபகப் படுத்தும் போது அதன் அளவை சற்று ஆளசிந்தித்துப்பாருங்கள் அல்லாஹ் குறிப்பிடும் போது."நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்;ஆனால் அவன் அவர்களை வஞ்சித்து விடுவான்;தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்);இன்னும்,மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.(அந்நிஸா:142)

4-அல்லாஹ்வை ஞாபகப்படுத்தாது அவனை மறந்து இவ்வுலக சொத்துக்கள்,பிள்ளைக்குட்டிகளில் மூழ்கி விடுவதை விட்டும் அல்லாஹ் எம்மை எச்சரித்துள்ளான்.அல்லாஹ் குறிப்பிடும் போது. "ஈமான் கொண்ட வர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்."(அத்தியாயம்:9)

5-அல்லாஹ் கூறிய இந்த சிறப்புக்களை ஒன்றாய் இணைந்து சிநிதியுங்கள் அல்லாஹ் குறிப்பிடும் போது...(என்னை நிணைவு கூறுங்கள் நான் உங்களை நிணைவு கூறுவேன்) உயர்ந்தோன் அல்லாஹ் ஹதீஸுல் குத்ஸியில் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன்.அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர் களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன்."(புகாரி,எண்:7405,முஸ்லிம்,எண்:2675). இதை அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

brightness_1 நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னாவில் வழிகாட்டலில் அதிகமான திக்ருகள் வந்துள்ளன.அவற்றுள் சில:(1)

1-இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:- லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு,அது பத்து அடிமை களை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும்.மேலும்,அவருக்கு நூறு நன்மைகள் எழுதப் படும்.அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும்.மேலும்,அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும்.மேலும்,அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது;ஒருவர் இதை விட அதிகமாக (முறை இதை ஓதினால் அல்லது மிக முக்கிய மான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர.மேலும் எவர் ஒருவர் ஒரு நாளில் ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!.இதை அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(புகாரி:3293, முஸிலம்:2691)

2-அபூ அய்யூப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸில் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்."எவர் லாஇலாஹ இல்லல்லாஹ்,வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்"என பத்து தடவைகள் கூறிகின்றாரோ அவர் 'இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சந்ததி களில் நான்கு அடிமைகளை விடுதலை செய்தவரைப் போன் றவராவார்'(நூல்,புகாரி,எண்:6404,முஸ்லிம்,எண்:2693).

brightness_1 நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னாவில் வழிகாட்டலில் அதிகமான திக்ருகள் வந்துள்ளன.அவற்றுள் சில:(2)

3-ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருகில் இருந்தோம்.அப்போது அவர்கள், "உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?" என்று கேட்டார்கள்.அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர்,"எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்)ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?" என்று கேட்டார்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,"அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை ("சுப்ஹானல்லாஹ்" என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப் படுகின்றன"என்று சொன்னார்கள்.(நூல்,முஸ்லிம், எண்:2698)

4- இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்''சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன.அவை கடலின் நுரை போன்ற அளவு (மிகுதியாக) இருந்தாலும் சரியே!(நூல்,புகாரி:6405), முஸ்லிமில் வரக்கூடிய மற்றுமொரு"அறிவிப்பில் யார் காலை யிலும் மாலையிலும் நூறு முறை "சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி"(அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்) என்று சொல்கிறாரோ அவர் கொண்டு வந்த (நல்லறத்) தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமை நாளில் கொண்டு வருவதில்லை;அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர"இதை அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம்,எண்:2692)

இவ்வாறு திக்ருகள்-அல்லாஹ்வை நிணைவு படுத்தலின் மகிமையும்,சிறப்பும் தொடர்ப்பாக ஏறாலமான ஹதீஸ்கள் வந்துள்ளன.இவ்வாறான சிறப்புக்கள்,மகிமைகள் தொடர்ப்பாக வந்துள்ள ஹதீஸ்களில் மிகச்சரியானைவளில் முன்னர் குறிப்ப டப்பட்டவைகளும் உள்ளடங்கும்.இவற்றை தவிர இன்னும் அதிகமான ஹதீஸ்களும் வந்துள்ளன.மேலும் அபீ மூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின் றார்கள்.அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு கூறினார்கள். 'சொர்க்கத்தின் கருவூலமான ஒரு வார்த்தையை உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?' என்று கேட்டார்கள்.நான்,'ஆம் (அறிவித்துத் தாருங்கள்)' என்று கூறினேன்.நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,'(அந்த வார்த்தை:)"லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ் (அல்லாஹ்வின் உதவியன்றி பாவங்களி லிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ மனிதனால் இயலாது)' என்றார்கள். (நூல்,புகாரி,எண்:4202).

மேலும்  அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்" என்று நான் கூறுவதானது,சூரியன் எதன் மீது உதிக்கிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாகும்.(நூல்,முஸ்லிம்,எண்:2695)இதை அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

brightness_1 நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னாவில் வழிகாட்டலில் அதிகமான திக்ருகள் வந்துள்ளன.அவற்றுள் சில:(3)

மேலும் இஸ்திக்பார் அஸ்தக்பிருல்லாஹ் -பாவமன்னிப்பு வேண்டுதலும் -திக்ரின் வகைகளில் உள்ளவையாகும். அஃகர்ரு அல்முஸனீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"எனது உள்ளத்தின் மீதும் திரையிடப்படுகிறது.நான் ஒவ்வொரு நாளும் நூறு முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்".(நூல்,முஸ்லிம்,எண்:2702)

இதுவே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செயலாகவும் காணப்பட்டது.எனவே தான் அவர்கள் பாவமன் னிப்பு,இஸ்திக்பார் மீது இவ்வாறு கூறி ஆர்வ மூட்டியுள்ளார் கள்.ஸஹீஹ் முஸ்லிமில் அஃகர்ரு அல்முஸனீ (ரலியல் லாஹு அன்ஹு) அவர்கள் வாயிலாக வரக்கூடிய ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"மக்களே! அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்.ஏனெனில்,நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறு முறை பாவமன்னிப்புக் கோருகிறேன்." (நூல்,முஸ்லிம்,எண்:2702)  

மேலும் புகாரியில் அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்.'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் 'அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி '(நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.) என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.(நூல்,முஸ்லிம், எண்:6307).எனவே ஒரு அடியான் பாவமன்னிப்பு கோருவதை விட்டும் பராமுகமாக இருக்கவே கூடாது.

திக்ரின் ஸுன்னத்தையும் -இவ்வாறே அனைத்து நாளாந்த ஸுன்னத்துக்களையும்-அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக புகாரி,முஸ்லிமில் வரக்கூடிய ஹதீஸைக் கொண்டு முடிக்கின்றேன்.இதுவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீஸ்.'(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை;மேலும் நாவுக்கு எளிதானவை;நன்மை தீமை நிறுக்கப்படும்)தராசில் கனமா னவை ஆகும்.(அவை:தான்)"சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்),சுப்ஹா னல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்).(நூல்,புகாரி, எண்:6406,முஸ்லிம்,எண்:2694)

அல்லாஹ்வின் புகழாலும்,அருளாலும் அனைத்து நல்லறங் களும் முற்றுப்பெறுகின்றன.