கொட்டாவியை அடக்கிகொள்ளல் அல்லது கையை வைத்து கட்டுப்படுத்திக் கொள்ளல்
இதை பின்வரும் ஹதீஸ் அறிவிக்கிறது.
"அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்.கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் 'அல்ஹம் துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு ('அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக' என) மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால்,கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும்.எனவே, உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் முடிந்தவரை அதைக் கட்டப்படுத் தட்டும்.ஏனெனில்,உங்களில் ஒருவர் (கட்டுப் படுத்தாமல் 'ஹா' என சப்தமிட்டுக்) கொட்டாவி விட்டால் அதைப் பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான்".அறிவிப்பாளர் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு.(நூல்,புகாரி,எண்:26663)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:என அபீ ஸஈத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். "உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில்,ஷைத்தான்(அப்போதுவாய்க்குள்) நுழைகின்றான்."(நூல், முஸ்லிம்,எண்:2995).இவ்வாறு அதை வாயால் அடக்கி கொள்வது,வாய் திறக்கப் படுவதை தடுத்துக் கொள்ளல்,பற்களால் உதடுகளை அழுத்திப் பிடித்துக்கொள்ளல் கையை வைத்துக் கொள்ளல் ஆகியவற்றால் கொட்டாவியை தடுத்துக் கொள்ளல் மூலமாக இது இடம் பெறலாம்.
கொட்டாவியின் போது வெளி வரக் கூடிய (ஆஹ்..,ஹா..) எனும் சப்தங்களை எழுப்பாது இருத்தல் மிகச்சிற்பானது
மேலும் கொட்டாவி விடுபவர் கொட்டாவியின் போது வெளி வரக் கூடிய (ஆஹ்...,ஹா...)எனும் சப்தங்களை எழுப்பாது இருத்தல் மிகச்சிற்பானது.இவ்வாறான சப்தங்கள் ஷைத்தான அவரை பார்த்து சிரிப்பதற்கான காரணியாக அமைகிறது.
இதை பின்வரும் ஹதீஸ் அறிவிக்கிறது:
இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"கொட்டாவி ஷைத்தானிட மிருந்து வருவதாகும். ஆகவே உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்த வரை அதை அடக்கிக் கொள்ளட்டும்.ஏனெனில், எவரேனும் 'ஹா' என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்".என அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(நூல்,புகாரி, எண்: 3298,முஸ்லிம்.எண்:2994).
முக்கிய குறிப்பு
சிலர் கொட்டாவியின் பின்னர் ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு தேடுகின்றனர். இதற்கான எவ்வித சான்றுகளும் நபி வழிகாட்டலில் கிடையாது.இதையும் தாண்டி இவ்வாறு செய்கின்ற வர்கள் இந்த சந்தர்ப்பத்தின் போது நபிகளாரை தொட்டும் வந்திராத வழிகாட்டலை பின் பற்றுவதனூடாக அவர்களது வழிகாட்டலுக்கு மாற்றமும் செய்கின்றனர்.
தொடர்ப்பு கொள்ள
எம்முடன்
எந்நேரத்திலும் உங்கள் அழைப்புக்களையும் கருத்துக்களையும் மனமகிழ்வுடன் வரவேற்கின்றோம்.