தும்மியவர் "அல் ஹம்துலில்லாஹ்" என கூறுவது ஸுன்னத்து ஆகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"உங்களில் ஒருவர் தும்மியதன் பின் "அல்ஹம்துலில்லாஹ்"எனக்கூறினால் அதை கேட்பவர் அல்லது அவரின் சகோதரன் ("யர்ஹமுகல்லாஹ்" என்று) மறுமொழி கூறட்டும்."யர்ஹமுகல்லாஹ் என அவருக்கு சொல்லப்பட்டால் அவர் "யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும்" என அவர் சொல்லட்டும்.(நூல்,புகாரி, 6224).இதை அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக் கின்றார்கள்.
இவ்வாறு அல்லாஹ்வை புகழும் வார்த்தைகள் பலவகை யிலும் சொல்லல்,சில போது "அல் ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்"எனவும் அபூ தாவுதில் பிரிதொரு அறிவிப்பில் வந்துள்ளது.அதில் "உங்களில் ஒருவர் தும்மினால் அவர் அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால் என கூறட்டும்". (நூல்,அபூ தாவுத்,எண்:5031,இமாம் இப்னுல் கையிம் ரஹிம ஹுல்லாஹ் அவர்கள் அவர்களது ஸாதுல் மஆத் (2/436) எனும் நூலில் இவ்வதீஸ் பற்றி குறிப்பிடும் போது இதன் அறிவிப்பாளர் தொடர் வரிசை ஸஹீஹ் ஆனது என குறிப்பிடுகிறார்கள்.
தும்மியவர் அல்ஹம்து லில்லாஹ் என அல்லாஹ்வை புகழ்ந்தால் அதை கேட்டவர் "யர்ஹமகல்லாஹ்" எனக் கூறுவதும் இதை கேட்ட தும்மியவர் பதிலளிக்கும் முகமாக "யஹ்தீகுமுல்லாஹு,வயுஸ்லிஹு பாலகும்".என சொல்லுவது ஸுன்னத்து ஆகும்.இவையனைத்தும் முன்னர் கடந்து சென்ற அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தும்மியவர் "அல்ஹம்து லில்லாஹ்" என அல்லாஹ்வை புகழாத போது தும்மியவருக்கு பதில் அளிக்காது இருப்பது ஸுன்னத்து ஆகும்.
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் பிரகாரம் தும்மியவர் "அல்ஹம்து லில்லாஹ்" என அல்லாஹ்வை புகழாத போது அவருக்கு பதில் அளிக்க மாட்டாது.இவ்வாறான நிலையில் தும்மியவருக்கு பதில் அளிக்காது இருப்பதும் ஸுன்னத்து ஆகும்.அனஸ் (ரலியல் லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நபி (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கருகில் இரண்டு மனிதர்கள் தும்மினர்.அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ('யர்ஹமு கல்லாஹ் - அல்லாஹ் உமக்குக் கருணைபுரிவானாக' என்று) மறுமொழி கூறினார்கள்.மற்றொருவருககு மறுமொழி கூற வில்லை.அப்போது அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப் பட்டது.அதற்கவர்கள்,'இவர் (தும்மியவுடன்) 'அல்ஹம்துலில் லாஹ்' என்று இறைவனைப் புகழ்ந்தார்.அவர், 'அல்ஹம்து லில்லாஹ்' என்று இறைவனைப் புகழவில்லை.(எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன்.அவருக்கு மறுமொழி பகரவில்லை)'என்று பதிலளித்தார்கள்.(நூல்,முஸ்லிம், எண்:2992)
எனினும் ஆசிரியர் மாணவர்களுக்கும்,தந்தை பிள்ளைக்கும் இந்த ஸுன்னத்தை கற்றுக் கொடுத்து பயிற்று வித்து இந்த ஸுன்னாவை அறியாத அல்லது மறந்து விட்ட அவர்கள் இதை உயிரூட்டக்கூடிய சூழ் நிலைகளில் கற்றுக் கொடுக்கப் படக்கூடிய நிலைகளாயின் தும்மியவர் அல் ஹம்துலில்லாஹ் என அல்லாஹ்வை புகழாத போது "குல் அல் ஹம்து லில்லாஹ்"அல் ஹம்து லில்லாஹ் கூறுங்கள் என கூறி சுட்டிக்காட்டலாம்.
இவ்வாறே தடிமன் சுரம் உள்ளவர் மூன்று முறைகளுக்கு மேல் தும்மினால் அதற்கும் பதிலளிக்க தேவை கிடையாது.
இமாம் அபூதாவத் அவர்கள் தமது அஸ்ஸுனன் எனும் நூலில் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு வாயிலாக நபிகளாரை தொட்டும் மர்ஃபூஃ,மவ்கூப்பாக அறிவிக்கும் ஹதீஸ் இதற்கு சான்றாக இருக்கிறது.இதில் நபிகளார் கூறி னார்கள்."நீர் உமது சகோதரன் மூன்றுதடவைகள் தும்மினால் அவருக்கு பதிலளிப்பீராக அதற்கு மேலுள்ளவை அது தடிமன் ஜுரம ஆகும்."(நூல்,அபூதாவத்,எண்:5034,இமாம் அல் பானி அவர்கள் இதை மர்ஃபூஃ,மற்றும் மவ்கூப் பான ஹஸன் தரத்தை கொண்டது என குறிப்பிட்டுள்ளார்கள். (ஸஹீஹ் அபூ தாவத்,4/308).
இதை பலப்படுத்தும் விதமாக முஸ்லிமில் ஸலமது இப்னு அக்வா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் வரக்கூடிய ஹதீஸில்.சலமா பின் அல்அக்வஉ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் தும்மி ("அல்ஹம்து லில்லாஹ்" என்று கூறி)னார்.அவருக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "யர்ஹமு கல்லாஹ்" (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக) என்று மறுமொழி கூறினார்கள்.அவரே மற்றொரு முறை தும்மினார். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,"இந்த மனிதருக்கு ஜலதோஷம் ஏற்பட்டுள்ளது" என்று சொன்னார்கள்.(நூல்,முஸ்லிம்,எண்:2993)
முன்னையதன் சாரம்சம் தும்மியவருக்கு இரு நிலைகளில் பதிலளிக்கப்பட மாட்டாது.அவையாவன.
1-அல்லாஹ்வை தும்மியவர் புகழாத போது.
2-மூன்று தடவைகளுக்கு மேல் தும்மியவர்.அவர் ஜுரத்தால், தடிமனால் பீடிக்கப்பட்டவர்.
தொடர்ப்பு கொள்ள
எம்முடன்
எந்நேரத்திலும் உங்கள் அழைப்புக்களையும் கருத்துக்களையும் மனமகிழ்வுடன் வரவேற்கின்றோம்.