ஸுனன் அர்ரவாதிப் எனும் பகுதியில் அன்னை ஆயிஷா,உம்மு ஹபீபா,இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் அறிவிக்கும் ஹதீஸிகளின் பிரகாரம் லுஹருக்கு முன்னர் நான்கும் பின்னர் இரண்டுமாக தொழுவது ஸுன்னத்தாகும்.இது ஏலவே குறிப்பிட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"ஒருவர் ஒவ்வொரு நாளும்-கடமையான தொழுகைகள்-தவிர கூடுதலாக பன்னிரண்டு ரக்அத்கள் தொழுதால் "அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை எழுப்புகிறான்"இதை உம்முஹபீபா (ரலியல்லாஹு அன்ஹா)அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்,முஸ்லிம்,எண்:728).மேலும் திர்மிதியில் இடம் பெற்றுள்ள ஹதீஸில் இதற்கு மேலதிகமாக லுஹருக்கு முன் நான்கும், அதற்கு பின் இரண்டும்,மக்ரிபுக்கு இரண்டும்,இஷாவுக்கு இரண்டும் ஃபஜ்ருக்கு முன்னர் இரண்டும் என வந்துள்ளது.(நூல்,திர்மிதி,எண் 415).இமாம்-திர்மிதி-அவர்கள்.ஹஸன் ஸஹீஹ் என குறிப்பிட்டுள் ளார்கள்.
லுஹர் தொழுகையின் முதல் ரக்அத்தை நீட்டித் தொழுவது ஸுன்னாவாகும்
அபூசயீத் அல்குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்ல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது காலத்தில் லுஹர் தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும்.அப்போது ஒருவர் பகீஉல் கர்கத் பகுதிக்குச் சென்று இயற்கைக் கடனை நிறைவேற்றி, அங்கத் தூய்மை செய்து விட்டுத் திரும்பி வந்து விடுவார்.அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முதல் ரக்அத்திலேயே இருந்து கொண்டிருப்பார்கள்.அவர்கள் (முதல் ரக்அத்தில்) நீண்ட நேரம் (குர்ஆன் வசனங்களை) ஓதிவந்ததே இதற்குக் காரணம்.(நூல்,முஸ்லிம்,எண்:454)
ஆகவே இமாம் லுஹரின் முதல் ரக்அத்தை நீட்டி தொழுவதும், அவ்வாறே தனித்து தொழுபவரும்,பெண் அவரது லுஹர் தொழுகையின் போதும் நீட்டித் தொழுவதும் ஸுன்னத் தாகும்.இது மறக்கடிக்கப்பட்ட ஒரு ஸுன்னாவாகவே காணப்படுகிறது.இதை மிகப் பரிபூரணமாகவும் ஆர்வத்துடனும் செயற்படுத்த அல்லாஹ்வின் துணையை வேண்டு கிறேன்.
வெப்பமான காலப்பகுதியில் லுஹர் தொழுகையையை வெப்பம் தணியும் வரை பிற்படுத்துவது ஸுன்னத்தாகும்.
இதை பின்வரும் ஹதீஸ் அறிவிக்கின்றது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்."வெப்பம் நிறைந்த நாளில் அது தணியும் வரை (லுஹர்) தொழுகையை தாமதப் படுத்துங்கள்.ஏனெனில்,கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சு காரணமாகவே உண்டாகிறது."இதை அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல், புகாரி,எண்:533,534.முஸ்லிம்,எண்:615).
எமது மார்க்க ஆசிரியரான அஷ்ஷைக் பின் உஸைமீன் ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடும் போது உதாரமாணமாக நாம் கோடைக் காலத்தில் சுமாராக பன்னிரெண்டு மணிக்கு சூரியன் நடு உச்சியிலிருந்து சாயும்-ஸவாலுடைய நேரம்- என வைத்து கணிப்பிட்டால்,சுமாராக அஸர் தொழுகையின் நேரம் நான்கரை (4:30pm) மணியளவிலாகும்.ஆகவே -இதன் பிரகாரம்- வெப்பம் தணியும் நேரம் -லுஹரை வெப்பம் தணியும் வரை பிற்படுத்துவது- சுமாராக நான்கு மணி வரையிலாகும்.(பார்க்க:ஸாதுல் மும்திஃ (2/104)
இதன் பிரகாரம் ஜமாத்துடன் கூட்டமாக தொழுபவர்,தனித்து தொழுபவர் என அனைவருக்கும் இவ்வாறு லுஹரை வெப்பம் தணியும் வரை பிற் படுத்துவது மிகச் சரியான கருத்தின் பிரகாரம் பொதுவானதொரு அம்சமாகும்.இதுவே எமது ஆசிரியர் அஷ்ஷைக் பின் உஸைமீன் ரஹ்ம ஹுல்லாஹ் அவர்களது தெரிவுமாகும்.எனவே இதன் படி பெண்களும் இச்சட்டத்திற்குள் நுழைந்து விடுவர்.எனவே அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் பொதுவாகவே வந்துள்ள ஹதீஸின் பிரகாரம் பெண்களும் அவர்களது தொழுகையை வெப்ப நிலையின் போது வெப்பம் தணியும் வரையும் பிற்படுத்துவது ஸுன்னத் ஆகும்.
தொடர்ப்பு கொள்ள
எம்முடன்
எந்நேரத்திலும் உங்கள் அழைப்புக்களையும் கருத்துக்களையும் மனமகிழ்வுடன் வரவேற்கின்றோம்.