10 தடவைகள்
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
"எவர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து,வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்".என காலையை அடையும் போது பத்து தடவைகள் கூறுகின்றாரோ அவருக்கு நூறு பாவங்கள் அழிக்கப்பட்டு நூறு நன்மைகள் எழுதப்படும்.மேலும் இது ஒரு அடிமையை விடுதலை செய்தமைக்கு நிகராகும்.இன்னும் அன்றைய தினம் மாலையை அடையும் வரை வானவர்களின் பாதுகாப்பும் கிட்டுகிறது.இவ்வாறே ஒருவர் மாலையில் கூறும் போதும் இவ்வாறே இதன் -பலன்கள்-உள்ளன.(நூல்,அஹ்மத், எண்8719,இமாம் இப்னு பாஸ் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இதன் அறிவிப்பாளர் தொடர் வரிசையை ஹஸன் என குறிப் பிட்டுள்ளார்கள்.
1 தடவைகள்
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا فِي هَذَا الْيَوم وَخَيْر مَا بعدِه، وَأَعُوذُ بِك مِنْ شَرِّ مَا فِي هَذا اليَوم وَشَر مَا بَعْدِه، اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَالْهَرَمِ، وَسُوءِ الْكِبَرِ، وَفِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ
"அம்ஸைனா வஅம்ஸல் முல்(க்)கு லில்லாஹி,வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, அல்லா ஹும்ம இன்னீ அஸ்அலுக அஸ்அலு(க்)க கைர மாஃபீ ஹாதிஹில் லைலத்தி வ கைர மா ஃபீஹா,வஅவூது பி(க்)க மின் ஷர்ரிஹா,வஷர்ரி மா ஃபீஹா,அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் கஸ்லி, வல்ஹரமி,வஸுயில் கிபரி,வஃபித்னதித் துன்யா, வஅதாபில் கப்ரி, எனவும் மேலும் காலையை அடையும் போது அஸ்பஹ்னா வஅஸ்ப ஹல் முல்(க்)கு லில்லாஹி..... அஸ்அலுக கைர மா ஃபீ ஹாதல் யவ்மி வகைர மா பஃதஹு,வஅஊது பிக மின் ஷர்ரி மா ஃபீ ஹாதல் யவ்மி வஷர்ரி மா பஃதஹு....."(நுல், முஸ்லிம்,எண் 2723)
1 தடவைகள்
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي، وَأَنَا عَبْدُكَ,وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ, أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ ''அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ.லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ.வ அன அப்துக்க.வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து.அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து.அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த' என்று ஒருவர் கூறுவதே தலை சிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.இந்தப் பிரார்த் தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்க வாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடு கிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.(நூல் புகாரி,எண் 6306)
1 தடவைகள்
اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ
"உங்களில் ஒருவர் காலையை அடைந்தால் அவர் அல்லா ஹும்ம பிக அஸ்பஹ்னா,வபிக அம்ஸய்னா,வபிக நஹ்யா, வபிக நமூது வஇலைகன் நுஷூர்,எனவும் மாலையை அடைந்தால் அவர் அல்லாஹும்ம பிக அம்ஸய்னா வபிக அஸ்பஹ்னா வபிக நஹ்யா,வபிக நமூது வஇலைகல் மஸீர் என கூறிக்கொள்ளட்டும்"(நூல்,அபூதாவுத்,எண்:5069, திர்மிதி, எண்:3391),அந்நஸாஈ அஸ்ஸுனன் அல் குப்ராவிலும், (9836),இப்னு மாஜா,எண்:3868),ஆகியோர் பதிவு செய்ய இமாம் பின் பாஸ் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இதை ஸஹீஹ் என குறிப்பிட்டுள்ளார்கள்.
1 தடவைகள்
اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ، وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا، أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ
"அல்லாஹும்ம ஃபா(த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி,ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாத(த்)தி,லாஇலாஹ இல்லா அன்த ரப்ப குல்லி ஷையின் வமலீ(க்)கஹு,அவூது பி(க்)க மின் ஷர்ரி நஃப்ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி,வஅன் அக்தரிஃப அலா நஃபஸீ ஸூஅன், அவ் அஜுர்ரஹு இலா முஸ்லிமின்."
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "நீர் நித்திரை கொள்ளும் போதும்,காலையையும்,மாலையையும் அடையும் போதெல்லாம் இதை கூறிக்கொள்வீராக என.(நூல், அஹ்மத்,எண்:6597,அபூதாவுத்,எண்:5076,அத்திர்மிதி,எண்:3529,அந்நஸாஈ, எண்:7699).இமாம் இப்னு பாஸ் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இதன் அறிவிப்பாளர் தொடர் வரிசையை சீரானது ஸஹீஹ் என குறிப் பிட்டுள்ளார்கள்).
3 தடவைகள்
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
எவரொருவர் ஒவ்வொரு காலை மற்றும் மாலைப்பொழுதின் போது "பிஸ்மில்லாஹில்லதீ லா யதுர்ரு மஅஸ்மிஈ ஷய்உன் ஃபில் அர்லி வலா ஃபிஸ்ஸமாஇ" என மூன்று தடவைகள் ஓதுவார் எனின் அவருக்கு எந்த தீங்கும் ஏற்பட மாட்டாது.(நூற்கள்.அஹமத்,எண்: 446,அத்திர்மிதீ,எண்:10179,இப்னு மாஜா,எண்:3869, இப்னு பாஸ் ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் இது பற்றி குறிப்பிடும் போது இதை இமாம் திர்மிதி அவர்கள் இவ்வதீஸ் ஹஸன்,ஸஹீஹ் எனக் குறிப் பிட்டுள்ளார்கள்.இது ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியது போன்றே ஆகும்.
3 தடவைகள்
رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا
"எந்தவொரு முஸ்லிம் அடியானும் அவன் காலை,மாலை அடையும் போது"ரலீது பில்லாஹி ரப்பா,வபில் இஸ்லாமி தீனா, வபிமுஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம நபிய்யா" எனக்கூறினால் அவரை அல்லாஹ் மறுமை நாளில் பொறுந்திக் கொள்வது கட்டாயமாகி விடுகிறது.(நூல்,அஹ்மத்,எண்:18967,அத்திர்மிதி, எண்:3389,இப்னு மாஜா,எண்:3870,இதன் அறிவிப்பாளர் தொடர் வரிசையை ஹஸன் என இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள் ளார்கள்.
1 தடவைகள்
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ، وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي
"அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக அல் ஆஃபியத ஃபித்துன்யா வல் ஆகிரா,அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக அல் அஃப்வ வல் ஆஃபியத ஃபீ தீனீ வதுன்யாய,வஅஹ்லீ வமாலீ,அல்லாஹும்ம ஸ்துர் அவ்ராதீ,வஆமின் ரவ்ஆதீ, அல்லாஹும்மஹ்ஃபத்னீ மின் பய்னி யதய்ய வமின் கல்ஃபீ,வஅன் யமீனீ,வஅன் ஷிமாலீ,வமின் ஃபவ்கீ, வஅஊது பிஅதமதிக அன் உக்தால மின் தஹ்தீ.(நூல்,அஹ்மத் அவர்களது முஸ்னத் கிரந்தத்தில்,எண்:4785,அபூ தாவுத், எண்:5074,இமாம் அந்நஸாஈ அவர்களது அல் குப்ரா எனும் நூலில்,எண்:10401,இப்னு மாஜா எண்:3871,மேலும் இதை இமாம் ஹாகிம் அவர்கள் ஸஹீஹ் எனவும் குறிப்பிட்டுள் ளார்கள்.
1 தடவைகள்
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
"அஊது பிகலிமாதில்லாஹித் தாம்மாதி மின் ஷர்ரி மா அலக்."(நூல்,அஹ்மத்,எண் 7898,திர்மிதி,எண்:3437).இவ்வதீஸை அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மேலும் இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இது ஹஸன் என குறிப்பிடுகி றார்கள்.
1 தடவைகள்
أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَكَلِمَةِ الْإِخْلَاصِ، وَدِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَمِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ حَنِيفًا, وَمَا كَانَ مِنْ الْمُشْرِكِينَ
அல்லாஹ்வின் தூதரவர்கள் காலையில் "அஸ்பஹ்னா அலா ஃபித்ரதில் இஸ்லாமி,வகலிமதில் இக்லாஸி வதீனி நபிய்யினா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம, வமில்லதி அபீனா இப்றாஹீம ஹனீஃபன்,வமா கான மினல் முஷ்ரிகீன."என கூறுவார்கள்.(நூல்,அஹ்மத்,எண்:21144,15367, மேலும் மாலையில் "அம்ஸய்னா அலா ஃபித்ரதில் இஸ்லாமி.."எனவும் ஓதுவார்கள்.இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இதன் அறிவிப்பாளர் தொடரை ஸஹீஹ் என குறிப்பிட்டுள்ளார்கள்.
1 தடவைகள்
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ
"யா ஹய்யூமு பிரஹ்மதிக அஸ்தகீஸு அஸ்லிஹ் லீ ஷஃனீ குல்லஹூ,வலா தகில்னீ இலா நஃப்ஸீ தரஃபத அய்னின்." (நூல்,அந்நஸாஈ,எண்:10405),அல்பஸ்ஸார்.(2/282). இமாமகளான இப்னு ஹஜர்,அல் பானி ஆகியோர் இவ்வதீஸை ஹஸன் என குறிப் பிட்டுள்ளனர்.
(பார்க்க:நதா இஜுல் அஃப்கார்,177,அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா (1/449).
7 தடவைகள்
حَسْبِيَ الله لاَ إِلهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلتُ وَهُوَ رَبُّ الْعَرشِ الْعَظِيمِ
"ஹஸ்பியல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ தவக்கல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அதீம்"என ஏழு தடவைகள் கூறினால் அனைத்து கவலைகளுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.(நூல், அபூதாவுத்,எண்:5081,இவ்வதீஸ் அபூ தர் ரலியல்லாஹு அன்ஹு வாயிலான அறிவிப்பாளர் தொடர் நபிகளார் வரை சென்றடையாது துண்டித்த வகையில் வந்துள்ள போதிலும் இதில் மிகச் சரியானது நபிகளாரை விட்டும் துண்டிக்கப்பட்ட -அதாவதுமவ்கூஃப்- தரத்தை கொண்டது.எனினும் இமாம் அல் பானி அவர்கள் குறிப்பிடுவது போன்று.இதன் சட்டம் நபிகளாரை விட்டும் துண்டிக்காத தொடரை கொண்டதாகும்.(பார்க்க:அஸ்ஸில்ஸிலா: 11/449)