பின்வரும் ஹதீஸ் இதற்கான சான்றாக இருக்கிறது.
அ-அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்: "என் உற்ற தோழர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, இரண்டு ரக்அத்கள் ளுஹாத் தொழுவது,வித்ர் தொழுது விட்டு உறங்குவது ஆகிய மூன்று விஷயங்களையும் எனக்கு அறிவுறுத் தினார்கள்.மேலும் இதை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் உபதேசம் செய்தார்கள்.(முஸ்லிமிமில்,எண்:722)ல் இடம் பெற்றுள்ளது. மேற்கண்ட ஹதீஸ் எனக்கு எனது உற்ற நண்பர் உபதேசம் செய்தார்கள் என அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு வாயிலாக.அந்நஸாஈ இமாமின் அஸ்ஸுனன் அல் குப்ராவில் இலக்கம் 2712) ல் இடம் பெற்றுள்ளது. மேலும் இமாம் அல் பானியவர்கள் தமது அஸ்ஸஹீஹா (2166) எனும் நூலில் இதை ஸஹீஹ் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆ-அபீ தர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:ஒவ்வொரு மனிதரும் அவரது மூட்டுக்களுக்கும். அவை ஒவ்வொன்றுக்கும் தர்மம் செய்ய வேண்டும்,எனவே ஒவ்வொரு தஸ்பீஹும்-ஸுப்ஹானல்லாஹ்-வும் ஸதகாவாகும்,ஒவ்வொரு தஹ்லீலும் -லா இலாஹ இல்லல்லாஹு -வும் தர்மமாகும்,ஒவ்வொரு தக்பீரும் -அல்லாஹு அக்பர் -உம் தர்மம் ஆகும்.நன்மையை ஏவு வதும் தர்மம் ஆகும்,தீமைய தடுப்பதும் தர்மம் ஆகும். லுஹாவின் நேரத்தில் தொழக்கூடிய இரண்டு ரக்அத்துக்கள் இவை அனைத்துக்கும் நிகரானது, போதுமானது ஆகும். (நூல்,முஸ்லிம்,எண்:720)
இவ்வதீஸில் வந்துள்ள "அஸ்ஸுலாமா" எனும் சொல்லின் அர்த்தம். ஒன்றோறொன்று இணைந்துள்ள மூட்டுக்கள் என்பதாகும்.
ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா வாயிலாக வந்துள்ள ஹதீஸின் படி மனிதன் முன்னூற்றி அறுபது மூட்டுக்களை கொண்டு படைக் கப்பட்டுள்ளான்.இவை ஒவ்வொன்றுக்குமாக "ஸதகாவை" நிறை வேற்றும் போது கொடிய நரக நெறுப்பை விட்டும் தன்னை தூரப்படுத்திக் கொண்டவாராக பயணிக்கின்றார்.
நிறைவேற்றப்படுவதற்கான நேரம்.இதன் நேரம் -சூரியன் உதித்து ஒரு ஈட்டியின் அளவு உயர்ந்தது- முதல் ஆரம்பமாகிறது.அதாவது தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரம் முடிந்தது முதல் ஆகும்.
மேலும் இதன் நேரம் முடிவடைவது "ஸவாலுடைய" நேரத்துக்கு சற்று முன்னர் ஆகும்.அதாவது சுமார் லுஹர் தொழுகையின் நேரத்துக்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் ஆகும்.
இதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.அமர் பின் அபஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக வந்துள்ள ஹதீஸில் நபிகளார் குறிப்பிடுகின்றார்கள்."நீர் ஸுபஹ் தொழுகையை தொழுது விட்டால் சூரியன் உதித்து அது உயரும் நேரம் வரை தொழாது தவிர்ந்து இருப்பீரக.இதன் பின்னர் நிழல் ஒரு ஈட்டியின் அளவு நிலைக்கும் வரை தொழுவீராக ஏனெனில் இத்தொழுகை சாட்சியமளிக்க கூடியதும்,சமூக மளிக்கப் படக்கூடியதுமாகும்.இதன் பின்னர் தொழுவதை விட்டும் தவிர்ந்து கொள்வீராக.ஏனெனில் இந்நேரத்தில் தான் நரகம் எறியூட்டப் படுகிறது.(நூல்,முஸ்லிம்,எண்:832)
இது-நிறைவேற்றுவதற்கான- மிகச்சிறப்பான நேரம்.இதன் கடைசி நேரம் ஆகும்.அதாவது ஓட்டக குட்டிகள்-வெப்பம்-காரணமாக ஒதுங்கும் நேரம் ஆகும்.
ஸைத் பின் அர்கம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் "சுடுமணலில் ஒட்டகக்குட்டியின் கால் குழம்புகள் கரிந்து விடும் நேரமே "அவ்வாபீன்" தொழுகையின் நேரமாகும்" எனக் கூறினார்கள்".(முஸ்லிம்,எண்:748)
இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடும் போது இவ்வ தீஸில் வந்துள்ள "தர்முது" எனும் சொல்லின் அர்த்தம் சூரிய வெப்பம் அதிகரித்தல் ஆகும்.மேலும் "அல் ஃபிஸால்" எனும் அரபு வார்த்தையின் அர்த்தம் ஒட்டக குட்டிகள் என்பதாகும்.இது அதன் கடைசி நேரத்தில் நிறைவேற்றுவது தான் மிகச்சிறப்பானதாக காணப்படக்கூடிய தொழுகை களில் ஒன்றாகும்.(பார்க்க:இஸ்லாமிய மார்க்க தீர்ப்புகள் 1/515).
லுஹாத் தொழுகையின் மிக குறைந்த ரக்அத்துக்களின் எண்ணிக்கை அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் பிரகாரம் இரண்டு ஆகும்.அந்த ஹதீஸில் "நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு மூன்று விடயங்களை கொண்டு உபதேசம் செய்தார்கள்,அதில் இரு ரக்அத் லுஹா தொழுகையையும் குறிப்பிட்டார்கள்.(நூல்,புகாரி,எண்:1981, முஸ்லிம், எண்:721).
எனினும் இதன் அதிகப்படியான ரக்அத்துக்களின் எண்ணிக்கையை -நோக்குமிடத்து- இதன் கூடிய ரக்அத்துக்கள் எட்டு ரக்அத்துக்கள் தான் என வரையறை செய்தவர்களுக்கு மாற்றமாக மிகச்சரியான கருத்து, அதற்கென குறித்ததொரு எண்ணிக்கை கிடையாது என்பதாகும்.அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் பிரகாரம் ஒருவர் தான் நாடினால் அல்லாஹ் அவருக்கு வசதியை ஏறபடுத்தினால் எட்டு ரக்அத்துக்களை விடவும் அதிகரித்தும் தொழுது கொள்ள முடியும்.மேலும் அவ்வதீஸில் அவர்கள் குறிப்பிடும் போது அல்லாஹ்வின் தூதர் லுஹா தொழுகையை நான்கு ரக்அத்துக்களாக தொழுவார்கள்.மேலும் இதை அல்லாஹ்வின் நாட்டப்படி அதிகரித்தும் தொழுவார்கள்.(நூல்,முஸ்லிம்,எண்: 719).