languageIcon
search
search
brightness_1 மலசல கூடம் நுழையும் போதும் வெளியேறும் போதும் -கூறுமாறு-வந்துள்ள திக்ரை கூறல்

 மலசல கூடம் நுழையும் ஒருவர் புகாரி முஸ்லிமில் வந்துள்ள -துஆவை-கூறுவது ஸுன்னத்து ஆகும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கழி வறைக்குள் நுழையும் போது 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி'.(இறைவா!ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)என்று கூறுவார்கள்.(நூல், புகாரி,எண்:6322, முஸ்லிம்,எண்:375).

(அல் குபுஸி).என்பது ஆண் ஷைத்தான்,அல் கபாஇஸ் என்பது பெண் ஷைத்தான,ஆகவே இதன் பிரகாரம் ஆண் பெண் ஷைத்தானின் தீங்குகளை விட்டும் பாதுகாப்பு கிட்டுகிறது.

(அல் கப்ஸி) என்பது தீமைகள் எனும் கருத்தை கொண்டது.இதன் படி அல் கபாஇஸி என்பது கொடிய ஆத்மாக்கள் என்பதாகும்.இதன் மூலம் கொடியவர்கள் அவர்களின் தீங்குகள் ஆகியவற்றை விட்டும் பாதுகாப்பு தேடலாக அமைகிறது.

-மேலும் கழிவறையிலிருந்து வெளியேறும் போது பின்வரும் துஆவை கூறல் ஸுன்னத்து ஆகும்:

இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் எனும் நிலையில் இமாம்களான அஹ்மத்,அபூதாவுத்,அத்திர்மிதி ஆகிய கிரந்தங்களில் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் வந்துள்ளதன் பிரகாரம்  நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிவறையிலிருந்து வெளியேறும் போது"குப்ரானக"என கூறுவார்கள் (நூல், அஹமத்,எண்:25220,அபூதவுத்,எண்:30,அத்திர்மிதி,எண்: 7, இமாம் அல் பானி அவர்கள் இதை தஹ்கீகு மிஷ்காதுல் மஸாபிஹில் 1/116) ஸஹீஹ் என குறிப்பிட்டுள்ளார்கள்.

brightness_1 வஸிய்யத் மரண சாசனத்தை-எழுதிவைப்பது

 ஒரு முஸ்லிம் அவர் நோயுற்ற போதிலும் அவரின் ஆரோக்கியமான நிலையிலும் இறுதி மரண சாசனத்தை -வஸிய்யத்தை-எழுதிவைப்பது ஸுன்னத்து ஆகும்.இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதற்கு ஏற்ப அதில் நபிகளார் குறிப்பிடும் போது:(மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை".என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(புகாரி, எண்:2783,முஸ்லிம், எண்:1626) இவ்வாறு இவ்வதீஸில் இரண்டு இரவுகள் என்பதானது ஒரு வரையறை அல்ல.மாறாக ஒருவரிடத்தில் அவரின் வஸிய்யத்து எழுதப்படாது அவரை விட்டும் குறுகிய காலம் கூட கடந்து விடக்கூடாது என்பதாகும்.ஏனெனில் அவர் எப்போது மரணிப்பார் என்பதை அறிய மாட்டார்.மேலும் இது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான ஸுன்னத்தும் ஆகும்.  

எனினும் இவ்வாறான வஸிய்யத்துகளில் அல்லாஹ்வின்  கடமைகளான  ஸகாத்,ஹஜ் அல்லது கஃப்ஃபாராக்கள் - குற்றப் பரிகாரங்கள்- போன்றனவும் அல்லது அடியார்களது உரிமைகள் கடன் நம்பிக்கையானவைகள் ஒப்படைத்தல் -அமானிதங்கள்-இவைகள் போன்றனவும்.ஸுன்னத்து அல்ல.மாறாக அவை கட்டாயமான வைகளாகும்.ஏனெனில் இவைகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டிய கட்டாய அம்சங்களாகும்.இதிலும் குறிப்பாக இவ்வுரிமைகள் தொடர்ப்பாக எவறும் அறிந்திராத போது இது மிகவும் ஏற்றமானது. ஆகவே இதன் பொதுவான அடிப்படை விதியும் {கட்டாய கடமை ஒன்று ஒன்றின் மீது தான் கடமையாகும் எனின் அதுவும் கட்டாயமானது}. 

brightness_1 கொடுக்கல் வாங்கலின் போது விட்டுக் கொடுப்பும், நெகிழ்வுத் தன்மையும்

அதாவது வாங்குபவரும் விற்பவரும் அவர்களது கொடுக்கல் வாங்கலின் போது அவர்களுக்கு இடையிலான விலையில் கடுமையாகவும்,அதிகம் விவாதிக்காமலும் பேரம் பேசாதும் விட்டுக் கொடுப் புடனும்,நெகிழ்வுத் தன்மையுடனும் நடந்து கொள்ளல்.  

இதை பின்வரும் ஹதீஸ் அறிவிக்கிறது:

ஜாபிர் பின்அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! 'என. (நூல்,புகாரி,எண்:2076)

அவ்வாறேதான் ஒருவர் அவிரின் உரிமையை வேண்டி நிற்கும் போதும் கூட மிருதுவாகவும்,நலினமாகவும் நடந்து கொள்வது ஸுன்னத்து ஆகும்.ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடும் போது "வழக்குரைக்கும் பொழுதும் "எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

brightness_1 ஒவ்வொரு வுழுவுக்கு பின்னரும் இரு ரக்அத்துக்கள் தொழல்

இது அதிகப்படியான மகிமையை கொண்டமைந்த-அதாவது சுவனத் திற்குள் நுழைவிக்கும் விதமான நாளாந்த ஸுன்னத்துக்களில் ஒன்றாகும்."நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு ஃபஜ்ருப் பொழுதில்,'பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்!ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்' என பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்டார்கள்.அதற்கு பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) 'இரவிலோ,பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களுள் சிறந்த செயல்' என்று விடைய ளித்தார்கள் (நூல்,புகாரீ,எண்:1149,முஸ்லிம்,எண்:2458).இதில் வந்துள்ள அரபு வார்த்தை "தப்ப நஃலைக" என்பது -செறுப்பசைவின் ஓசை என்பதாகும். 

brightness_1 இன்னொரு- தொழுகையை அதை எதிர்ப்பார்த்து காத்திருத்தல்.

ஒரு தொழுகையிலிருந்து இன்னொரு-தொழுகைக்காக அதை எதிர்ப் பார்த்து காத்திருத்தல்.அதிக நன்மைகளை அள்ளித்தரக்கூடிய ஒரு ஸுன்னத்தாகும்.

இதை பின்வரும் ஹதீஸ் அறிவிக்கின்றது:அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் நேரமெல்லாம் தொழுகையிலேயே அவர் இருக்கிறார்.மேலும்,அவரை அவரின் குடும்பத்தார் மீது திரும்பாது தடுத்துக் கொண்டிருப்பதும் தொழுகை அல்லாது வேறு ஒன்றும் இல்லை.(நூல்,புகாரி,எண்:659,முஸ்லிம், எண்:649),அவர் தொழுகைக்காக காத்திருப்பதனால் தொழுகையின் நன்மையை பெற்றுக்கொள்கின்ரார்.

அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"உங்களில் ஒருவர் தொழக்கூடிய இடத்தில் அமர்ந்திருக் கும் வரை வானவர்கள் அவருக்காக பிரார்த்திக்கின்றனர்!அங்கே, அவரின் காற்றுப் பிரிந்து,உளூ நீங்கி விடாமலிருக்கும் வரையும் (பிறருக்குத்) துன்பம் தரும் எதையும் அவர் செய்யாமலிருக்கும் வரையும் 'இறைவா! இவர் மீது கருணை செய்வாயாக! இவருக்கு இரக்கம் காட்டு வாயாக!'என்று வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள்! உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் வரை அவர் தொழுகையிலேயே இருக்கிறார்! 'மேலும் அவரை அவரது குடும்பத்தின் பால் திரும்பி விடாது தடுத்துக்கொண்டிருப்பதும் தொழுகையை தவிர வேறு ஒன்றும் கிடையாது. (நூல்,புகாரி,எண்:659,முஸ்லிம்,எண்:649).

"வுழூ நீங்கி விடாது வரை" என்பது வுழூவை முறித்து விடும் ஒன்று இடம் பெறாத வரை என்பதாகும்.மேலும் இமாம் முஸ்லிம் அவர்கள் அறிவிப்பில்."அங்கே,அவரின் காற்றுப் பிரிந்து,உளூ நீங்கி விடாம லிருக்கும் வரை(பிறருக்குத்) துன்பம் தரும் எதையும் அவர் செய்யாமலி ருக்கும் வரை"ஆகும்.(நூல்,முஸ்லிம்,எண்: 649).

அதாவது இத்தகைய நற்கூலிக்கான நிபந்தனைகளாக அவையில் எவருக்கும் தீங்கிழைக்காமலும்,காற்றுப் பிரியாமலும்-வுழூ முறிந்து விடாதும்-இருத்தல் வேண்டும்.

brightness_1 மிஸ்வாக்-தகுச்சியால் பல் துலக்கல்-செய்தல்

மிஸ்வாக்கு செய்தல் பொதுவாகவே அனைத்து நேரங்களிலும் அதிகம் செய்ய வேண்டிய ஸுன்னத்துக்களில் ஒன்றாகும்.மேலும் நபி ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "நான் உங்களுக்கு மிஸ்வாக் -செய்வதை- அதிகம் வழியுறுத்துகின்றேன்"(நூல்,புகாரி,எண்:888).என சொல்லுமளவுக்கு.அதிகம் ஆர்வமூட்டி உள்ளார்கள்.மேலும் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக வந்துள்ள ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடும் "மிஸ்வாக் செய்தல் வாய்க்கு சுத்தமானதும்,இறைவனிடத்தில் விருப்பமான தாகவும் இருக்கின்றது."(நூல்,அஹமத், எண:(7),அந்நஸாஈ, எண்,(5)இது ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா வாயிலாக வந்துள்ளது.இதை இமாம் அல்பானியவர்கள் தமது அல் இர்வாஃ (101/1)எனும் நூலில் ஸஹீஹ் என குறிப்பிட்டுள்ளார்கள்.

நாம் மேலே மிஸ்வாக் செய்வது மிக முக்கிய ஸுன்னத்தாகும் சந்தர்ப்பங்கள் பலதை சுட்டிக் காட்டினோம்.இரவில் விழித்தெழுதல், வுழூஃ செய்யும் போது,தொழுகைகளின் போது,வீட்டிற்குள் நுழையும் வேளை போன்றன அவற்றுள் சிலவாகும்.இவை இரவிலும் பகலிலும் நாளாந்தம் பல தடவைகள் திரும்பத்திரும்ப செய்யப்படக் கூடியவை களாகவும் இருக்கின்றன.-அல்லாஹ் மிக அறிந்தவன்-

brightness_1 ஒவ்வொரு தொழுகைக் காகவும் வுழூவை -அது முறியாத போதிலும்-புதுப்பித்துக் கொள்ளல்.

ஒரு முஸ்லிமை பொறுத்த வரை ஒவ்வொரு தொழுகைக்கும் புதிதாக வுழூ செய்து கொள்வது ஸுன்னத்து ஆகும்.உதாரணமாக ஒருவர் வுழூ செய்து மக்ரிப் தொழுகையை தொழுது விட்டார் எனின் பின்னர் இஷாத்தொழுகையை அடையும் போது அவரின் வுழூ முறியாத போதிலும் கூட அதற்காக புதிதாக வுழூ செய்து கொள்வது ஸுன்னத்து ஆகும்.எனவே ஒவ்வொரு தொழுகைக்குமாக புதிதாக வுழூ செய்வது ஸுன்னத்து ஆகும்.  

இதை பின்வரும் ஹதீஸ் அறிவிக்கின்றது.புகாரியில் இடம் பெறும் பினவரும் ஹதீஸில் "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் வுழூ செய்பவர்களாக இருந்தார்கள். (நூல்,புகாரி, எண்:214).

மேலும் ஒருவர் அவர் நாள் முழுதுமாக வுழுவின் நிலையில் இருப்பதும் ஸுன்னத்து ஆகும்.ஸவ்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொட்டும் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் அவர்கள் கூறுகின்றார்கள்."ஒரு விசுவாசியை தவிர வேறு எவரும் வுழுவை பேணிப்பாதுகாத்துக்கொள்ள மாட்டார்.(நூல்,அஹமத்.எண்:22434,இப்னு மாஜா:277,அத்தாரமி, எண்:655. இமாம் அல்பானி அவர்கள் அல் ஜாமிஃ இல் ஸஹீஹ் என குறிப்பிட்டுள்ளார்கள் 1/225).