ஒருவர் காலணி அணியும் போது முதலில் வலக் காலில் அணிவதும் கழற்றும் போது முதலில் இடக்காலில் இருந்து கழற்றுவதும் விரும்பத் தக்கதாகும்.
இதை பின்வரும் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. இதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் காலணி அணியும் போது முதலில் வலக் காலில் அணியட்டும்.அதைக் கழற்றும் போது முதலில் இடக் காலில் இருந்து கழற்றட்டும்.வலது முதலில் அணியப்படக்கூடியதாகவும்,இறுதியாக கழற்றப்பட கூடிய தாகவும் இருக்கட்டும்.(நூல்,புகாரி, எண்:5857).
முஸ்லிமில் வரக்கூடிய மற்றுமொரு அறிவிப்பில் பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம்.ஒன்று,இரு காலணிகளையும் ஒருசேர அவர் அணிந்துகொள்ளட்டும்.அல்லது இரண்டையும் ஒருசேர கழற்றிவிடட்டும்.இதை அபூஹுரைரா (ரலியல் லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்: 2097)
இவ்விரு ஹதீஸிலும் மூன்று ஸுன்னத்துக்கள் உள்ளன. அவையாவன:
1-பாதனி அணியும் போது வலதை முற்படுத்தல்.
2-பாதனியை கழற்றும் போது இடதை முற்படுத்தல்.
3-ஒரு பாதனியுடன் பயனிக்காது இருக்கும் பொருட்டு பாதனி அணிந்தால் இரண்டையும் அணிதல், கழற்றினால் இரண் டையும் ஒரு சேர கழற்றி விடல்.
அதாவது இதனால் நாடப்படுவது வெண்ணிற ஆடைகளையும் இதை ஒத்த ஆடைகளையும் அணிவதாகும்.இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் படி இவ்வாறு அணிவது ஸுன்னத்தாகும்.அந்த ஹதீஸில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடும் போது "நீங்கள் வெண்ணிற ஆடைகளை அணியுங்கள்,மேலும் உங்களில் மரணித்த வர்களுக்கும் வெண்ணிற ஆடையை கொண்டு கபனிடுங்கள்.இதுவே உங்களின் ஆடைகளில் மிகச் சிறந்த ஆடையாகும்"(நூல் அஹ்மத்,எண்:2219,அபூ தாவுத், எண்: 3878,அத்திர்மிதீ,எண்: 994).(இமாம் அல் பானி அவர்கள் இதை ஸஹீஹ் என அவர்களது ஸஹீஹ் அல் ஜாமிஃ இல் குறிப் பிட்டுள்ளார் கள்.1/267).
ஆசிரியர் ஷைக் பின் உஸைமீன் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் குறிப்பிடும் போது வேட்டி,சட்டை,மேலாடை என அனைத் தையும் இது உள்ளடக்குகிறது.எனவே இவை வெண்ணிறத்தில் இருத்தல் வேண்டும்.அதுவே மிகச் சிறப்பானது.எனினும் வேறு நிறத்தில் ஆடை அணிந்தாலும் அதுவும் குற்றமாக மாட்டாது. இருப்பினும் அவை பெண்களுக்கு என மாத்திரம் குறிப் பானதாக இல்லாது இருத்தல் கட்டாய நிபந்தனையாகும்.-(பார்க்க:இவர்கள துரியாழுஸ்ஸாலிஹீனுக்கான விளக்கவுரை (2/1087).
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் போது"எனக்கு உலகில் பெண்களும், வாசனைத் திரவியங்களும் விருப்பத்துக்கு உரியன.எனினும் எனது கண்குளிர்ச்சி அனைத்தும் தொழுகை தான்".என. குறிப்பிட்டார்கள்."(நூல் அஹ்மத்,எண்,12293,அந்நஸாஈ, எண்: 3940). இமாம் அல்பானி அவர்கள் இதை ஸஹீஹ் அந்நஸாஈ இல் ஹஸன் ஸஹீஹ்,என குறிப்பிட்டுள்ளார்கள்).
எனினும் "உங்கள் உலகில் மூன்று அம்சங்கள் எனக்கு விருப்ப மானது" எனும் சொற்றொடர் பலவீனமானது.
மேலும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வெறுக்கும் விதமான வாடை காணப்படுவதை அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தார்கள்.புகாரியில் இடம் பெற்றுள்ள அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஒரு நீண்ட ஹதீஸில் அவர்கள் குறிப்பிடு கின்றார்கள்."நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துர்வாடை -அதாவது நாற்றம்-என்பது அவர்களுக்கு மிக கடுமையான வெறுப்புக்குரி யாதாகவே காணப்பட்டது.(நூல்,புகாரி,எண்:6972).
வாசனைத்திரவியங்களை -நறுமணத்தை- பெற மறுப்பது மகரூஹ் ஆகும்.
ஒரு ஹதீஸில் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறு கின்றார்கள் 'நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட) நறுமணப் பொருளை மறுத்ததில்லை'.(நூல்,புகாரி,எண்:2582).
அதாவது தலை சீவும் -வாரும்- போது வலது புறத்தால் ஆரம்பித்து பின்னர் இடது புறத்தை சீர் செய்தல் ஆகும்.
இதை பின்வரும் ஹதீஸ் அறிவிக்கின்றது.
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் செயல்கள் அனைத்திலும் வலப் பக்கத்தை(க் கொண்டு தொடங்கு வதை)யே விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்; காலணி அணியும் போதும்,தலை வாரிக் கொள்ளும் போதும்,(உளூ மற்றும் குளியல் மூலம் தம்மைத்) தூய்மைப் படுத்திக்கொள்ளும் போதும் (வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பினார்கள்).(நூல்,முஸிலிம்,எண்: 268).