brightness_1
முகமன்-ஸலாம்- கூறல் ஸுன்னத்தாகும்.
இவ்வாறு இது ஸுன்னத்து என்பதற்கு பரவலான பல ஹதீஸ்கள் வந்துள்ளன.அவற்றுள் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை தொட்டும் அறிவிக்கும் ஒரு ஹதீஸில். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்"ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லி முக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆறாகும்"என்று கூறினார்கள்."அவை யாவை, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது.அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,"அவரைச் சந்திக்கும் போது முகமன் கூறுவாயாக.அவர் உன்னை விருந்துக்கு அழைத்தால் அவருக்குப் பதிலளிப்பாயாக.அவர் உன்னிடத்தில் அறிவுரை கூறச் சொன்னால் அவருக்கு அறிவுரை கூறுவாயாக.அவர் தும்மி "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினால் (யர்ஹமு கல்லாஹ் என்று) அவருக்கு மறுமொழி கூறு வாயாக.அவர் நோய் வாய்ப்பட்டால் அவரை உடல் நலம் விசாரிப்பாயாக.அவர் இறந்து விட்டால் அவரது ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்வாயாக" என்று கூறினார்கள்.(நூல்,முஸ்லிம்,எண்:2162)
எனினும் முகமனுக்கு-ஸலாத்துக்கு-பதில் அளிப்பது கட்டாயம். இதை பின்வரும் வசனம் அறிவிக்கிறது.
அல்லாஹ் குறிப்பிடும் போது "உங்களுக்கு ஸலாம் கூறப் பட்டால்,அதற்கு பிரதியாக அதை விட மிக அழகான வார்த்தைகளைக் கொண்டு ஸலாம் கூறுங்கள்.அல்லது அதையே திரும்பக் கூறுங்கள். நிச்சயம் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் கணக் கெடுப்பவனாக இருக்கின்றான்".(அத்தியாயம், அந்நிஸா: 86).
ஏவல்களின் போது அடிப்படை அது கட்டாயம் என்பதை விட்டும் மாற்றியமைக்கும் விதமாக ஏதும் வராத போது அது கட்டாயம் என்பதாகும்.ஆகவே மார்க்க அறிஞர்களில் பலரும் இவ்வாறு ஸலாத்துக்கு பதில் அளிப்பது கட்டாயம் என குறிப் பிட்டுள்ளனர். அவர்களில் இப்னு ஹஸ்ம்,இப்னு அப்துல் பர், அஷ்ஷைக் தகிய்யுத்தீன் இன்னும் பலரும்-ரஹிமஹு முல்லாஹும்-இதைனையே குறிப்பிட்டுள்ளனர்.(பார்க்க:-மார்ரக்க ஒழுக்க நெறிகள்-அல் ஆதாபுஷ்ஷர இய்யா-1/357), (பதிப்பு.முஅஸ்ஸ ஸதுர்ரிஸாலா).
-முகமன்-ஸலாம்- கூறல்,அதற்கு பதில் அளித்தல் ஆகிய வற்றின் மிகச்சிறப்பான,பரிபூரணமான வடிவம்"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல் லாஹி வபரகாதுதஹு" என்பதாகும். இதுவே முகமன் கூறலில் மிகச்சிறப்பான பரிபூரணமான நிலையாகும்.
இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப் பிடும் போது முகமன்-ஸலாம்- கூறும் போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி காட்டல் -பரிபூரணமாக-வபரகாதுஹு என்பது வரை குறிப்பிடு வதாகும்.(பார்க்க:-ஸாதுல் மஆத், 2/417).
ஸலாத்தை பரப்புதல்.ஸுன்னத்து என்பதையும் தாண்டி இது ஆர்வமூட்டபட்ட மிக அதிக சிறப்புக்களையும் கொண்ட ஸுன்னத்தான விடயம்.அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாரை தொட்டும் அறிவிக்கும் ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்."எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணை யாக நீங்கள் நம்பிக்கை கொள்ளாத வரை சுவனம் நுழைய. மாட்டீர்கள் மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு நேசம் கொள்ளாத வரை நம்பிக்கை கொள்ள மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒன்றை செய்தால் அதனால் உங்களுக்கு மத்தியில் அன்பாளர்களாக மாறிவிடுவீர்கள் எவ்வாறானதை உங்களுக்கு அறிவிக்கவா.அது தான் உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை பரப்பிக்கொள்ளுங்கள்.(நூல்,முஸ்லிம், எண்:54)