முஅத்தின்-அதான் சொல்பவர்-அதான் சொல்லும் போது அவர் கூறுவதையே. பின்தொடர்ந்து கூறுவதும்,ஹய்யா அலா எனும் இடங்களில்"லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ்" எனக் கூறுவதும் ஸுன்னத்தாகும்.
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:'பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள் .. " (முஸ்லிம், எண்,384),மேலும் உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.அதில் "முஅத்தின் அல்லாஹு அகப்ர் என கூறினால் அதற்கு அல்லாஹு அக்பர் என கூறவும், மேலும் முஅத்தின் அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹு என கூறினால் அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹு என்றே கூறட்டும்.மேலும் முஅத்தின் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்றால் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்றே கூறட்டும்,மேலும் முஅத்தின் ஹய்யா அலஸ்ஸலாஹ் எனக் கூறினால் லா ஹவ்ல வலா குவ்வத என கூறட்டும் இன்னும் ஹய்யா அலல் ஃபலாஹ் எனக்கூறினால் மீண்டும் லாஹவ்ல வலா குவ்வத என கூறட்டும்.பின்னர் அல்லாஹு அக்பர் என கூறினால் அல்லாஹு அக்பர் என கூறட்டும்,பின்னர் லா இலாஹ இல்லல்லாஹு என கூறினால் இவ்வாறே லா இலாஹ இல்லல்லாஹ் என்றே கூறட்டும்.இவ்வாறே ஒருவர் உள்ளத்தால் கூறினால் சுவனம் நுழைந்து விடுவார்.(நூல் முஸ்லிம் எண்,385).
ஃபஜ்ர் தொழுகையில் தஸ்வீபின் "அஸ்ஸலாத்து கைருன் மினன்னவ்ம்"எனும் வார்த்தையின் -போது.முஅத்தின் கூறுவது போன்றே கூறல் வேண்டும்.
முஅத்தின் "அஷ்ஹது அன்ன முஹம்மதர்ரஸூ லுல்லாஹ்" என இரண்டாவது தடவை கூறிய பின்னர் ஸஅத் ரலியல் லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் வரக் கூடிய பின்வரும் துஆவை ஓதுவது ஸுன்னத்தாகும்.அதில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப் பைக் கேட்கக்கூடியவர் (அறிவிப்பு முடிந்த பின்பு) "அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு,லா ஷரீக்க லஹு,வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன் என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்."(நூல் முஸ்லிம்,எண்.386).
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள்.ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான்.பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள்.வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவி யாகும்;அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும்.அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன்.எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்ள். (நூல் முஸ்லிம், எண்.384).
நபிகளார் மீது சொல்லப்படும்"ஸலவாத்துக்களில்"மிகச்சிறப்பான வகை ஸலவாத்து,ஸலாத்து இப்றாஹிமிய்யா எனும் பின்வரும் ஸலவாத்து ஆகும்.அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின், வஅலா ஆலி முஹம்மதின்,கமா ஸல்லய்த அலா இப்றாஹீம.......... "
ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் அதில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "எவர் ஒருவர் முஅத்தின் அதான் கூறிய பின்னர்"அல்லாஹும்ம ரப்பஹாதிஹித் தஃவதித் தாம்மா,வஸ்ஸலாதில் காஇமா,ஆதி முஹம்மதினில் வஸீலத வல் ஃபதீலா,வப்அஸஉ மகாமன் மஃமூதன் இல்லதீ வஅத்தா என ஓதுவாரோ அவருக்கு மறுமையில் எனது சிபாரிசு கிடைக்கும்.(நூல் புகாரி,எண்.:614).
அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்க ளின் ஹதீஸில் முஅத்தின்கள் எம்மை விட மிகச்சிறப்பானவர்களாக இருக்கின்றனர்,என நபிகளாரிடம் ஒரு மனிதர் குறிப்பட அப்போது நபிகளார் "முஅத்தின் கூறுவதை நீரும் கூறுவீராக,மேலும் அவர் அதானை முடித்தவுடன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவீராக அதன் போது -கேட்பது- வழங்கப்படும்.என கூறினார்கள். "(நூல் அபூதாவுத்,எண்-524,இதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் ஹஸன் தரத்தை கொண்டது என குறிப்பிட்டுள்ளார்,நதாஇஜுல் அஃப்கார் (1/367),(மேலும் இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் அல் கலிமுத்தய்யிப் எனும் நூலில் பக்கம் 73 ல் குறிப்பிட்டுள்ளார்கள்.)
மேலும் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள்."அதானுக்கும், இகாமத்துக்கும் இடைப்ட்ட நேர்த்தில் -கேட்கப்படும்-பிரார்த்தனை மறுக்கப்பட மாட்டாது."(நூல்,அந்நஸாஈ,எண் :9895).(இதை இப்னு குஸைமா அவர்கள் ஸஹீஹ் என குறிப்பிட்டுள்ளார்கள் 1/221/425).