அதாவது ஒருவர் வுழூஃ செய்ய ஆரம்பிக்கும் முன்னர் அல்லது வுழூவுக்காக வாய் கொப்பளிக்கும் முன்னர் இதை செய்தல் வேண்டும்.இதுவே இவ்வாறு மிஸ்வாக் செய்வது ஸுன்னத்தாகும் இரண்டாவது இடமாகும்.முதலாவது இடம் முன்னர் குறிப்பிடப்பட்டது.ஏனவே ஒருவர் வுழூஃ செய்யும் போது மிஸ்வாக் செய்வது ஸுன்னத்தாகும்.அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்."எனது சமூகத்தினருக்கு கஷ்டம் இல்லை என இருந்திருப்பின் நான் அவர்களுக்கு ஒவ்வொரு வுழூவின் போதும் மிஸ்வாக் செய்வதை கட்டாயப் படுத்தியிருப்பேன்." (நூல், அஹ்மத்:9928.பின் குஸைமா அவர்கள் இதை ஸஹீஹ் என குறிப்பிட்டுள்ளார்.1/73/140,அல் ஹாகிம் 1/245).மேலும் இமாம் புகாரி அவர்கள் இதை ஒரு குறிப்பாக உறுதிப்பட குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் குறிப்பிடும் போது இதை தலைப்பில் காய்ந்த மற்றும் ஈரமான குச்சியை கொண்டு நோன்பாளி மிஸ்வாக் செய்தல்)என குறிப்பிட்டுள் ளார்கள்.
அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் "நாங்கள் (இரவில் உறங்கச் செல்வதற்கு முன்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்க ளுக்காக அவர்களது பல் துலக்கும் குச்சி,தண்ணீர் ஆகிய வற்றைத் தயாராக எடுத்து வைப்போம்.இரவில் அவர்களை அல்லாஹ் தான் நாடிய நேரத்தில் எழுப்புவான்.அவர்கள் எழுந்து பல்துலக்கி,அங்கத் தூய்மை (உளூ) செய்து விட்டு தொழுவார்கள்.(நூல் முஸ்லிம்.எண்:746).
அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஹதீஸில் நபிகளாரை தொட்டும் வந்துள்ளது."எவர் வுழூவின் போது அல்லாஹ்வின் பெயரை கூறவில்லையோ அவருக்கு வுழூஃ இல்லை." (நூல் அஹ்மத்,11371, அபூதாவுத், 101,இப்னு மாஜாஃ:397).
"உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதற் காகத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கத் தூய்மை செய்தார்கள்.(முதலில்) தம்முடைய இரு முன் கைகளை மூன்று முறை கழுவினார்கள்..... " பின்னர் நான் செய்த இந்த அங்கத் தூய்மையை போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். என கூறினார்கள்.(நூல்,புகாரி,எண்:226,முஸ்லிம்,எண்:164)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும்,சுத்தம் செய்வதி லும்,தங்களின் எல்லா விஷயங்களிலும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்' என ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(நூல்,புகாரி, எண்:168, முஸ்லிம்,எண்:268)
'உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஹதீஸின் பிரகாரம் அவர்கள் நபிகளாரின் வுழூவை வர்ணிக்கும் போது அதில் அவர்கள்..... வாய்க் கொப்பளித்து,மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தித் சீந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள்.(நூல், புகாரி,எண்:199,நூல் முஸ்லிம்.எண்: 226).மேலும் வாய்கொப் பளித்தலையும்,நாசிக்கு நீர் செலுத்துவதையும் முகத்தை கழுவியதன் பின்னர் செய்தாலும் பரவாயில்லை அதுவும் ஆகுமான செயலாகும்.
லகீத் பின் ஸபுரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள், நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்."நீ வுழூவை பரிபூரணமாக செய்வீராக,விரல்களை குடைந்து கழுவிக் கொள்வீராக,மேலும் நீர் நோன்பாளியல்லாத போது நாசிக்கு நீர் செலுத்தும் போதும்,வாய் கொப்பளிக்கும் போதும் அதிகப் படியான தண்ணீர் கொண்டு செய்வீராக.(நூல்,அஹ்மத்,எண்:17847,அபூ தாவுத், எண்:142,இவ்வதீஸ் பற்றி இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடும் போது இது ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆகும் என்கிறார்.நூல் அல் இஸாபா (9/15).மேலும் நாசிக்கு நீர் செலுத்தும் போதும்,வாய் கொப்பளிக்கும் போதும் அதிகப் படியான தண்ணீர் கொண்டு செய்வீராக.என்பது பரிபூரணமாக வுழூஃ செய்வீராக என்பதன் மூலமான சொற்றொடரின் மூலமாக பெறப்பட்டது ஆகும்).
'அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில்) அவர்கள் கூறுகின்றார்கள் "....கையை நுழைத்து வெளியேற்றினார்கள். பின்பு ஒரே கையில் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்.இவ்வாறே மூன்று முறை செய்தார்கள்.(நூல்,புகாரி,எண்: 192. முஸ்லிம்,எண்:235).
இரு கைகளையும் தண்ணீரில் நனைத்து தலையின் முற்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை கொண்டுசென்று மீண்டும் அதனை முற்பகுதிக்கு கொண்டு வரவேண்டும்.பிறகு ஆட்காட்டி விரலால் காதின் உட்பகுதியையும்,பெருவிரலால் காதின் வெளிப்பகுதியையும் தடவ வேண்டும்-.பெண்களும் இவ்வாறே தலையை தண்ணீர் கொண்டு தடவிக்கொள்வார்,எனினும் இதன் போது கழுத்துக்கு கீழ் உள்ள முடிகள் தடவப்பட மாட்டாது.
இதை தெளிவுபடுத்தும் சான்றாக பின்வரும் ஹதீஸ் அமைகிறது.இதில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது இரு கைகளையும் தலையின் முன்பாகத்தில் வைத்து பிடரி வரை தடவி மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கைகளைக் கொண்டு வந்தார்கள்.இதை அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலியல்லாஹு அன்ஹு) (ஆதாரம்:புகாரி:185, முஸ்லிம்:235).
முதற்தடவை கழுவுவது கட்டாயம் (வாஜிப்)ஆகும்.இரண்டாம் மூன்றாம் தடவைகள் கழுவுவது ஸுன்னத்தாகும்.மேலும் மூன்று தடவைகளுக்கு மேல் கழுவப்படவும் மாட்டாது.
இதை தெளிவுபடுத்தும் சான்றாக புகாரியில் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலான ஒரு ஹதீஸில் நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வுழூஃ செய்யும் போது ஒவ்வொரு தடவை - உறுப்புக்களை-கழுவினார்கள்.(புகாரி,எண்:157),மேலும் புகாரியில் அப்துல்லாஹ் பின் ஸைத் ரலியல்லாஹு அன்ஹு வாயிலாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "இவ்விரண்டு தடவைகள் கழுவினார்கள்".(புகாரி,எண்:158), எனவும்,புகாரி,முஸ்லிம் ஆகிய இரு கிரந்தங்களிலும் உஸ்மான ரலியல்லாஹு அன்ஹு வாயிலாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)"மும்மூன்று தடவைகள் கழுவினார்கள்".எனவும் அறிவிப்புக்கள் வந்துள்ளன.எனவே இதில் மிகச்சிறப்பானது மாறி மாறி செயலாற்றுவது.இதற்கேற்ப சில போது ஒவ்வொரு தடவையும்,இன்னும் சில போது இரு தடவைகளும் மற்றும் சில போது மூன்று தடவைகள் எனவும் சில சந்தர்ப்பங்களில் உறுப்புக்களில் எண்ணிக்கையை மாற்றுதல் உதாணமாக முகத்தை மூன்றுதடவையும், கைகளை இரு தடவையும், கால்களை ஒரு தடவையும் கழுவிக்கொள்ளல்.இது அப்துல்லாஹ் பின் ஸைத் ரலியல்லாஹு அன்ஹு வாயிலாக மற்றொரு அறிவிப்பிலும் இடம் பெற் றுள்ளது.(பார்க்க,ஸாதுல் மஆத்,(1/192).இருந்த போதிலும் மிகப்பரிபூரணமானதும் அதிகம் நபிகளார் செய்து வந்தமையும் மும்மூன்று தடவைகள் கழுவுதல் ஆகும். இதுவே நபிகளார்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது வழி காட்டலும் ஆகும்.
உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:"உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்து விட்டு,அஷ்ஹது அல்லாயி லாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல் களும் அவருக்காகத் திறக்கப் படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.(நூல்,முஸ்லிம், எண்:234).
அல்லது:மற்றுமொறு அறிவிப்பில் அபீ ஸஈத் ரலியல்லாஹு அன்ஹுவாயிலாக வந்துள்ள ஹதீஸின் படி "எவர் பரிபூர ணமாக வுழூஃ செய்து பின்னர் ஸுப்ஹான கல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லா அன்த,அஸ்தக்ஃ பிருக வஅதூபு இலைக என ஓதினால் அது முத்திரையிடப்பட்டு விடும்,பின்னர் அது அர்ஷின் கீழ் உயர்த்தப்பட்டு மறுமை நாள் வரை அதன் முத்திரை உடைக்கப் பட மாட்டாது".(நூல்,அந்நஸாஈ -ஃபீ அமலில்யவ்மி வல்லைல்,எனும் நூலில், பக்கம்,147,அல் ஹாகிம் 1/752,இதன் அறிவிப்பாளர் தொடர் வரிசையை ஸஹீஹ் என இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் அவர்களின் நதாஇ ஜுல் அஃப்கார் எனும் நூலில் 1/246 ல் குறிப்பிட்டுள் ளார்கள்.இதில் அவர் தெளிவு படுத்தும் போது இது நபிகளார் வரையிலுமான தொடர் இல்லாத போதிலும் இதன் அடிப்படை சட்டம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வரை யிலான தொடர்ப்பை கொண்டது, ஏனெனில் இதில் சொந்தக் கருத்துக்கான வாய்ப் புகள் ஏதும் கிடையாது.