ஃபஜ்ருடைய ஸுன்னத்து காலையின் ஆரம்பத்திலிருந்து நிறைவேற்றப் படும் முதல் ஸுனன் ரவாத்திபுகளில் உள்ளது. இதை பற்றிய விடயங்களுக்கு முன் ஸுனன் ரவாத்திபுகள் என்றால் என்ன என நோக்கும் போது அவை ஃபர்ளான தொழுகைகளை தொடர்ந்துள்ள ஸுன்னத்தான தொழுகை களாகும்.இவை 12 ரக்அத்துக்களை கொண்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"ஒருவர் ஒவ்வொரு நாளும்-கடமையான தொழுகைகள்-தவிர கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுதால் "அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை எழுப்புகிறான் "இதை உம்முஹபீபா (ரலியல் லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக் கின்றார்கள்.(நூல்,முஸ்லிம்,எண்:728).மேலும் திர்மிதியில் இடம் பெற்றுள்ள ஹதீஸில் இதற்கு மேலதிகமாக லுஹருக்கு முன் நான்கும், அதற்கு பின் இரண்டும்,மக்ரிபுக்கு இரண்டும்,இஷாவுக்கு இரண்டும் ஃபஜ்ருக்கு முன்னர் இரண்டும் என வந்துள்ளது. (நூல்,திர்மிதி,எண்-415).இமாம்- திர்மிதி-அவர்கள்.ஹஸன் ஸஹீஹ் என குறிப்பிட்டுள் ளார்கள்.
ஸைத்பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாரை தொட்டும் அறிவிக்கின்றார்கள்."மனிதர்களே நீங்கள் உங்கள் தொழுகைகளை உங்கள் வீடுகளிலேயே தொழுவுங்கள்.மேலும் ஒருவர் கடமையல்லாத தொழுகைகளை வீட்டில் தொழுவது தான் மிகச் சிறப்பானது. (நூல்,புகாரி, எண்-7290,முஸ்லிம் எண்:781)
மிகப்பிரதானமான ஸுனன் அர்ரவாத்திபுகளில் ஃபஜ்ருடைய ரவாத்திபு மிகப்பிரதானமானது.இதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவு படுத்துகிறது.
அ-அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.வேறு எந்த ஸுன்னத்தான தொழுகைகளுக்கும் காட்டாத அதிக கரிசனையையும் அக்கரையையும் ஸுபஹ் தொழுகைக்கு முன்னராக தொழப்படும் இரண்டும் ரக்அத்துக்களுக்கு காட்டினார்கள். (நூல்,புகாரி,எண்:1196, முஸ்லிம்,எண்:724).
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின் றார்கள்.நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.ஃபஜ்ருடைய இரு ஸுன்னத்துக்களும் இவ்வுலகம் இவ்வுலகில் இருப்பவைகளை விட மிகச்சிறப்பானது.(நூல்,முஸ்லிம், எண்:725).
ஃஜ்ருடைய ஸுன்னத்து தொழுகையானது பல்வேறு வகையில் தனித்து விளங்குகிறது.
முதலாவது-புகாரி,முஸ்லிம் கிரந்தங்களில் வருவது போன்று அது ஊரிலும்,பிரயாணத்திலும் ஸுன்னத்து ஆகும்.லுஹர், மக்ரிப்,இஷா ஆகிய ஏனைய ஸுனன் அர்ரவாத்திபுகளை பிரயாணத்தின் போது விட்டு விடல்.
இரண்டாவது-இதன் கூலி முன்சென்ற ஹதீஸ்களில் வந்துள் ளதை போல் இவ்வுலகம் இதில் உள்ளவைகள் அனைத்தையும் விட மிகச் சிறப்பானது ஆகும்.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.ஃபஜ்ருடைய இரு ஸுன்னத்துக்களும் இவ்வுலகம் இவ்வுலகில் இருப்பவைகளை விட மிகச்சிறப்பானது.(நூல்,முஸ்லிம், எண்:725).
மூன்றாவது-முன்சென்ற ஹதீஸ்களில் வந்துள்ளதை போன்று இதை நிறைவேற்றும் போது மிகச்சுறுக்கமாக நிறை வேற்றுவதும் ஸுன்னத்து ஆகும்.
இதற்கான சான்றாக அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் அமைகிறது.அதில்"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களில்அல்ஹம்து ஓதினார்களா? என்று நான் நினைக்குமளவுக்குச் சுருக்கமாகத் தொழுவார்கள்".(நூல் புகாரி,எண்: 1171,முஸ்லிம்,எண்:724).
எனினும் இவ்வாறு தொழும் போது அதன் அடிப்படை நிபந்தனைகள் பாதிக்கும் விதமாகவும்,அதை காகம் கொத்துவது போல் கொத்துவதன் மூலம் தடைசெய்யப்பட்ட அம்சம் ஏற்படாது இருப்பது.கட்டாய நிபந்தனையாகும்.
நான்காவது-ஃபஜ்ருடைய ஸுன்னத்து தொழுகையின் போது அத்தியாயம் அல் ஃபத்திஹாவுக்கு பின்னராக அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக முஸ்லிம் கிரந்தத்தில் வந்துள்ளது போன்று முதல் ரக்அத்தில் அத்தியாயம் குல் யாஅய்யுஹல் காஃபிரூனும் ,இரண்டாவதில் குல் ஹுவல்லாஹு அஹத் அத்தியாயத்தையும் ஓதுவது. அல்லது அத்தியாயம் அல் ஃபாத்திஹாவுக்கு பின்னர் முதல் ரக்அத்தில் கூலூ ஆமன்னா பில்லாஹி, வமா உன்ஸில இலய்னா வமா உன்ஸில இலா இபராஹீம வஇஸ்லமாஈல வஇஸ்ஹாக வயஃகூப வல்அஸ்பாதி வமா ஊதிய மூஸா வஈஸா வமா ஊதியன்னபிய்யூன மின் ரப்பிஹிம் லா நுஃபர்ரிகு பய்ன அஹதின் மின்ஹும் வனஹ்னு லஹு முஸிலிமூன்.(அத்தியாயம்-அல் பகரா,வசனம்:136).ஓதுவதும் ஸுன்னத்து ஆகும்.
இரண்டாவது ரக்அத்தில் குல் யா அஹ்லல் கிதாபி தஆலவ் இலா கலிமதின் ஸவாஇன் பய்னனா வபய்னகும் அல்லா நஃபுத இல்லல்லாஹ வலா நுஷ்ரிக பிஹி ஷய்அன் வலா யத்தகித பஃலுனா பஃலன் அர்பாபன் மின் தூனில்லாஹி ஃபஇன் தவல்லவ் ஃபகூலுஷ்ஹதூ பிஅன்னா முஸ்லிமூன். (அத்தியாயம்,ஆலு இம்ரான்,வசன எண்:52). இவ்வதீஸ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக வந்துள்ளது.ஆகவே இது தொடர்பாக பலாவாறும் வந்துள்ள தனால் முன்னர் குறிப்பட்டதை போன்றும் இன்னும் சில வேளையில் இதையும் ஓதுவதும் ஸுன்னத்து ஆகும்.
ஐந்தாவது - ஃபஜ்ர் தொழுகைக்கு பின்னர் வலது புறமாக சாய்ந்து சற்று சாய்ந்துகொள்வதும் ஸுன்னத்தாகும்.
இதற்கான சான்றாக அமைகிறது.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். "நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட்டால் வலப்புறமாக சாய்ந்துக் கொள்வார்கள்.."(நூல்,புகாரி,எண்:1160, முஸ்லிம்,எண்:736).
ஜாபிர் பின் சமுரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுது விட்டு தொழுத இடத்திலேயே சூரியன் நன்கு உதயமாகும் வரை அமர்ந்தி ருப்பார்கள்.(முஸ்லிம்,எண்.670),
இவ்வதீஸில் வந்துள்ள "ஹஸனன்" எனும் வார்த்தையின் அர்த்தம் நன்கு உதிக்கும் வரை என்பதாகும்.