languageIcon
search
search
brightness_1 இந்த ருகுனை நீட்டுதல்.

ஸாபித் அல்புனானீ (ரஹ்மதுல்லாஹ்) அவர்கள் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு வாயிலாக அறிவிக்கின்றார்கள்.அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் (எங்களிடம்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல் ெலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித் ததைப் போன்றே நான் உங்களுக்குத் தொழுவிக்கிறேன்;அதில் எந்தக் குறையும் வைக்கமாட்டேன் என கூறினார்கள்.(பிறகு அவர்கள் தொழுவித்தார்கள்.)அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் (தொழுவித்த போது) ஒன்றைச் செய்வார்கள். ஆனால்,அவ்வாறு நீங்கள் செய்வதை நான் பார்த்ததில்லை. அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் குனிந்து (ருகூஉ செய்து) நிமிர்ந்ததும் (நீண்ட நேரம்) நேராக நிற்பார்கள்.எந்த அளவிற்கென்றால் அவர்கள் அதை மறந்து விட்டார்களோ! என்று எவரேனும் கூறிவிடுவார்.மேலும் அவர்கள் (சஜ்தா) செய்து தலையை உயர்த்தியதும் இருப்பில் (நீண்டநேரம்) நிலைகொண்டிருப்பார்கள்.எந்த அளவிற் கென்றால் அவர்கள் அதை மறந்து விட்டார்களோ! என்று எவரேனும் கூறிவிடுவார்.(இந்தளவுக்கு இவற்றை நீண்டதாக அமைத்துக்கொண்டார்கள்).(நூல்,புகாரி, எண்:821, முஸ்லிம், எண்:472).

brightness_1 ஒருவர் இரண்டாவது,நான்காவது ரக்அத்துக்களுக்காக எழும் போது எழும்புவதற்கு முன்னர் சற்று அமர்வது ஸுன்னத்தாகும்.

இது (ஜல்ஸதுல் இஸ்திராஹா) என அழைக்கப்படும் இதில் குறிப்பான துஆக்கள் ஏதும் கிடையாது.

இவ்வாறு இதை உறுதிப்படுத்தும் விதமாக மூன்று ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.அவையாவன:

மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொழுததை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தொழுகையின் ஒற்றைப் படையிலான ரக்அத் களின் போது உட்காராமல் (அடுத்த ரக்அத்துக்காக) ஏழ மாட்டார்கள்.(நூல்,புகாரி,எண்:823).மேலும் நபிகளாரை தொட்டும் "என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்".என வரக்கூடிய ஹதீஸையும் இந்த மாலிக் பின் அல் ஹுவைரிஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே அறிவிக்கின்றார்கள்.

மேலும் (ஜல்ஸதுல் இஸ்திராஹா) ஸுன்னத்து எனும் விடயம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.எனினும் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸின் பிரகாரம் மிகச்சரியானது.பொதுவாகவே அது ஸுன்னத்தாகும். இவ்வாறு இது பொதுவான ஸுன்னத்தான அம்சம் என்பதை இமாம்களான அந்நவவி,அஷ்ஷவ்கானி,இப்னு பாஸ், அல்பானி -ரஹிமஹு முல்லாஹ்-ஆகியோரும்,மார்க்க விளக்கங்களுக்கான ஆய்வுக்கும் விளக்கங்களுக்குமான நிலைக் குழுவும் - அல்லஜ்னுதுல் தாஇமா லில் ஃபுஹூஸி இல் மிய்யதி வல் இஃப்தாஹ் வும் -குறித்துக் காட்டுகின்றனர். (பார்க்க:இதன் பல்வேறுபட்ட ஆய்வுகளும் கட்டுரைகளும்:11/99).(அல்லஜ்னா அத்தஇமா-(6/445-446).

மேலும் இமாம் அந்நவவி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் குறிப் பிடும் போது இதுவே சரியானதுமாகும்.இதைனையே ஸஹீஹான ஹதீஸ்க ளும் உறுதிப்படுத்துகின்றன.(பார்க்க:அல் மஜ்மூஃ 3/441).